ஐஸ்வர்ய கடாட்சம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டுமா? எப்போதுமே இந்த 1 பொருள் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

arisi-padi-nel-lakshmi
- Advertisement -

நமக்கு தேவை உள்ள, தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை இப்போதெல்லாம் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைக்கின்றோம். இப்படி ஆர்டர் செய்வதன் மூலம், நம் வீட்டிற்குள் ஆர்டரில் போட்ட அந்த பொருட்கள் வருகிறதோ இல்லையோ, நம் கையில் இருந்து மகாலட்சுமி, அதாவது காசு கரைந்து போகிறது. சேமிப்பு என்ற ஒரு பழக்கமே நம்மிடம் இல்லை. கைக்கு காசு வந்தால், உடனடியாக ஆன்லைனில் ஏதாவது ஒன்றை ஆர்டர் செய்து, அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது. அந்த பொருள் நமக்கு, இப்போது அவசியமாக தேவையா, தேவையில்லையா என்று ஒருபோதும் யோசிப்பதே கிடையாது.

காசை கணக்கில்லாமல் செலவு செய்வதை முதலில் நிறுத்துங்கள். அனாவசியமாக பணம் காசை செலவு செய்தால் ஐஸ்வர்யம் நம்மிடத்தில் தங்காது. காசை மதிக்காதவன் இடத்தில், மகாலட்சுமி தேவி எப்படி தங்குவாள். கொஞ்சம் நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அனாவசிய செலவை முதலில் நிறுத்திவிட்டு, பிறகு பரிகாரத்தை செய்யுங்கள். அப்போதுதான் பலனை முழுமையாக பெற முடியும்.

- Advertisement -

வீட்டில் ஐஸ்வரிய கடாட்சம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்:
நம்முடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிலையாக தங்க வேண்டும் என்றால், வீட்டில் எப்போதும் ஒரு பாட்டிலில் நெல்மணிகள் இருக்க வேண்டும். இந்த நெல்லை வைத்து என்ன செய்வது. தினமும் காலையில் இந்த நெல்லில் இருந்து ஒரு கைப்பிடியை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போடலாம்.

மொட்டை மாடியில் இந்த தானியத்தை தூவி விட்டால், புறா குருவி போன்ற மற்ற பறவைகள் வந்து இந்த நெல்லை சாப்பிட்டு விட்டுச் செல்லும். தினமும் இப்படி நெல்லை காக்கை குருவிகளுக்கு இரையாகப் போடுவதன் மூலம் நமக்கு புண்ணியமும் சேரும். நம் வீட்டில் இருக்கும் நெல் மாதத்திற்கு ஒருமுறை தீர்ந்துவிடும். நெல்லை புதுசாக வாங்கி மீண்டும் பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம். எந்த வீட்டில் நெல் மணிகள் இருக்கிறதோ, அந்த வீட்டில் வறுமை என்பது நிச்சயம் தங்காது. ஐஸ்வர்ய கடாட்சம் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களின் பட்டியலில் இந்த நெல்லும் அடக்கம்.

- Advertisement -

இந்த நெல்லுக்கு, அந்த காலத்திலிருந்து நம்முடைய முன்னோர்கள் ஒரு மதிப்பை கொடுத்து வந்தனர். குலதெய்வத்துக்கு நிகராக இந்த நெல்லை பார்ப்பார்கள். அறுவடை செய்த பிறகு இந்த நெல்லில் இருந்து முதல் படியை எடுத்து சாமிக்கு தான் சமர்ப்பணம் செய்வார்கள். அதேபோல ஒரு வீட்டில் ஒரு விவசாய குடும்பத்தில் இருக்கும் விதைநெல் என்பது அவர்களுடைய குல சாமிக்கு சமமாக கருதப்படும். இப்படி தெய்வமாக பார்க்கக்கூடிய நெல்மணிகள் நமக்கு எல்லாம் சாப்பாடு போடக்கூடிய அன்னலட்சுமிக்கு சொந்தமானது.

இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட நெல்லை நம்முடைய வீட்டில் வைத்திருந்தால் போதும். வீட்டில் எப்போதும் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும். செல்வ செழிப்பு கொடுக்கும். எப்போதுமே பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணம் நிரம்ப நெல்லை நிரப்பி, அதன் மேலே அன்னபூரணி தாயை அமர வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வீட்டில் எப்படி உப்பு, துவரம் பருப்பு, அரிசி, போன்ற பொருட்களை நிறைவாக வாங்கி வைக்கிறோமோ அதே போல இந்த நெல்லையும் ஒரு பாட்டிலில் கொட்டி நிறைவாக வையுங்கள். அதில் எப்போதும் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் எதுவென்றே தெரியாதவர்கள் ஒரே கைப்பிடி மண்ணை வைத்து இதை செய்தால் குலதெய்வமே உங்களை தேடி வந்து அருள் புரியும்.

ஒரு மஞ்சள் நிற துணியில் ஒரு கைப்பிடி அளவு நெல்லை வைத்து, அதில் ஒரு ரூபாயை போட்டு முடிந்து குலதெய்வத்தை நினைத்து நிலை வாசல் படியில் கட்டி வைத்தால் போதும். வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் வராது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தியும் இந்த நெல்லுக்கு உண்டு. வீட்டில் சந்தோஷமும் நிம்மதியும் நிலையாக இருக்க வேண்டும் என்பவர்கள் மேல் சொன்ன இந்த விஷயங்களை நம்பிக்கையோடு பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -