உங்களுடைய வீட்டில், உங்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய இந்த பொருட்களை எல்லாம், தானமாகக் கொடுத்தால் நிச்சயம் உங்கள் வீட்டு ஐஸ்வரியம், உங்கள் கையாலேயே வெளியே சென்றுவிடும்.

old-items1
- Advertisement -

நம் வீட்டு ஐஸ்வர்யம் வெளியில் செல்வதற்கு பல காரணங்கள், பல விதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை தானமாக கொடுத்தாலும், நம் வீட்டு ஐஸ்வரியம், குறிப்பாக நம் கையாலேயே வெளியே செல்லும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட அந்த பொருட்கள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோமா. ‘சிலபேரது வீட்டில் முன்னோர்களையே மறந்து விடுகிறார்கள். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களா நினைவு இருக்கப் போகின்றது’!

old-items

சரி, பதிவிற்கு செல்வோம். பொதுவாகவே முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாமே நம் வீட்டு பரண் மேல் தான் இருக்கும். கொஞ்சம் எடை அதிகமான பொருட்கள் என்றால், ஏதாவது ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அது என்னென்ன பொருட்கள் ஆக இருக்கும். அவர்கள் பயன்படுத்திய பித்தளை பாத்திரங்கள், பழைய பூஜை பொருட்கள், அரிசியை அளப்பதற்காக பயன்படுத்தும் படி, உப்பு ஜாடி ஊறுகாய் ஜாடி, அம்மிக்கல் ஆட்டுக்கல், பெரும்பாலும் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை பாரம்பரியமாக நாமும் வைத்திருப்போம். வைத்திருப்போம் அவ்வளவு தான். தற்சமயம் பயன்படுத்துவது கிடையாது.

- Advertisement -

சில வீடுகளில் திருமணத்திற்கு பயன்படுத்தும் மன பலகை என்று சொல்லுவார்கள் கொஞ்சம் நீளமாக இருக்கும், திருமண மரப்பலகை, அடுத்தபடியாக கலச சொம்பு வைத்திருப்பார்கள். அந்த காலத்தில் திருமணத்திற்கு எல்லாம் திருமண பானை என்று சொல்லி ஒன்று வாங்கி வைத்திருப்பார்கள். அதை எல்லாம் பத்திரமா நம்முடைய பாட்டி பரண் மேல் வைத்திருக்கும். இப்படிப்பட்ட நம் வீட்டிற்கு பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மங்களகரமான பொருட்களை யாருக்கும் இனாமாக தானம் கொடுக்கவே கூடாது.

ammi-kal-aattu-kal

குறிப்பாக, நிறைய பேர் இந்த பொருட்களெல்லாம் வீட்டை அடைத்துக் கொள்கிறது என்ற காரணத்தினால் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய அம்மிக்கல், ஆட்டுக்கல் எல்லாவற்றையும் தூக்கி கொடுத்து விடுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு. வீட்டின் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க கூடிய பொருட்களில் இந்த அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் ஒன்று.

- Advertisement -

அம்மிக் கல்லுக்கு ஆட்டோக்களுக்கு முதலிடம் என்றால் அப்போது மற்ற பொருட்களையெல்லாம் தானம்  கொடுக்கலாமா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். பாரம்பரியமாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பொருட்களை முடிந்தவரை இனாமாக தானம் கொடுக்காதீர்கள். அந்த பொருட்களை பயன்படுத்த பாருங்கள். பயன்படுத்த முடியாத  பழைய பொருளை மாற்றி, கடைக்காரரிடம் புது பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

ammi-kal

அப்படி இல்லை என்றால், நீங்கள் உங்களுடைய உறவினர்களுக்கு தானமாக கொடுப்பதாக இருந்தாலும் சரி, தெரிந்தவர்களுக்கு தானமாக கொடுப்பதாக இருந்தாலும் சரி, தெரியாதவர்களுக்கு தானம் கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட தொகை ஒற்றைப் படையில் 11 ரூபாய், 101 ரூபாய் என்று வாங்கிக் கொண்டு அதன் பின்பு இந்த பொருட்களை கொடுப்பது சிறப்பு. சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் பின்பற்றி கொள்ளுங்கள்.

- Advertisement -

uppu jaadi

ஒரு வீடு என்று இருந்தால் கட்டாயம் அம்மிக்கல் ஆட்டுக்கல் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் இந்த அம்மிக்கல் ஆட்டுக்கல் இல்லை என்றால் நீங்கள் சிறிய அளவிலாவது புதுசாக வாங்கி வையுங்கள். தயவுசெய்து இருக்கும் அம்மிக்கல்லை தூக்கி அடுத்தவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அடடே! இந்த பேப்பரை வைத்து இவ்ளோ செய்யலாமா? இது தெரியாமல் தூக்கி போட்டோமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -