அடடே! இந்த பேப்பரை வைத்து இவ்ளோ செய்யலாமா? இது தெரியாமல் தூக்கி போட்டோமே!

aluminium-foil-paper0

பெரும்பாலான கடைகளில் உணவுகளை பேக் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பர் வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரில் கட்டிக் கொடுக்கும் உணவு பொட்டலங்கள் பிளாஸ்டிக் கவர்களை விட மேலானது என்றே கூறலாம். பிளாஸ்டிக்கின் கெடுதல்களிலிருந்து பாதுகாக்கவே அலுமினியம் கவர்களில் உணவுகளை கட்டிக் கொடுக்கின்றனர். இதை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் நாம் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இதை வைத்து சில உபயோகமான விஷயங்களை செய்யலாம். அது என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

aluminium-foil-paper1

அலுமினியம் ஃபாயில் பேப்பர், நம் உடம்பில் இருக்கும் தீராத வலிகளை கூட எளிதாக தீர்க்குமாம். தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அலுமினியம் பேப்பரை மூட்டுகளில் சுற்றிக் கொண்டு கயிறு அல்லது டேப் கொண்டு ஒட்டிக் கொள்ளலாம். இரவில் இது போல் செய்துவிட்டு காலையில் எடுத்து விடலாம். தொடர்ந்து ஏழு நாட்கள் செய்ய மூட்டுவலி குறைவதை உணரலாம்.

மூட்டுவலி மட்டும் அல்ல முதுகு வலி இருப்பவர்களும் முதுகில் சுற்றிக் கொண்டு சில மணி நேரங்கள் அப்படியே விட்டு பின்னர் எடுத்து விடலாம். இதனால் முதுகில் இருக்கும் வலிகள் நீங்கும். உடம்பில் எந்த பாகத்திலும் வலி நரம்புகள் சீராக, இந்த பயிற்சி உபயோகமாக இருக்கும். சில அலுமினியம் ஃபாயில் பேப்பர்களை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வலி இருக்கும் இடங்களில் இது போல் சுற்றிக் கொண்டு சில மணி நேரம் கழித்து பாருங்கள். உங்களுடைய வலிகள் மாயமாகி இருக்கும்.

wifi

வீட்டில் வைஃபை பயன்பாடு அதிகம் உள்ளவர்கள் சிக்னல் கிடைக்காத நேரங்களில் நமக்கு தேவையான விஷயங்களை பார்ப்பதற்கு, அல்லது வேலை செய்வதற்கு வெறுப்பாக இருக்கும். இந்த நேரத்தில். வீட்டில் இருக்கும் எந்த திசையில் இருந்து உங்களுக்கு நெட்வொர்க் தேவையோ அந்த இடத்தில் இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரை கட்டி தொங்க விடுங்கள். எங்கிருந்தாலும் சிக்னலை உங்களுக்கு இழுத்துக் கொண்டு வந்து தரும்.

- Advertisement -

நீங்கள் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தி கூர்மை இல்லாமல் இருந்தால், சில அலுமினியம் ஃபாயில் பேப்பரை எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி பாருங்கள். அப்புறம் சுலபமாக உங்களுடைய கத்தி கூர்மையடைந்து காய்கறிகளை எளிதாக வெட்டுவதற்கு உதவும்.

aluminium-foil-paper2

இன்று இருக்கும் நவீன உலகில் நம்முடைய பாதங்கள் சாதாரண நேரங்களில் கூட அதிகமாக சோர்வுடன் இருக்கும். பாதங்களில் இருக்கும் அயர்ச்சி நீங்க, அலுமினியம் ஃபாயில் பேப்பரில் பாதங்களை சுற்றி இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். சில மணி நேரத்திற்கு பிறகு அவற்றை நீக்கி விடுங்கள். பாதத்தில் இருக்கும் அழுத்தம் நீங்கி லேசாக உணர்வீர்கள். பாதங்கள் மட்டுமல்ல முகத்தில் இருக்கும் சோர்வை நீக்கவும், அலுமினியம் ஃபாயில் பேப்பரை சில மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து எடுத்து கண்கள் மற்றும் கன்னங்களில் அழுத்தம் படும்படியாக வைத்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். பிறகு பார்த்தால் நீங்களே பிரஷ்ஷாக உணர்வீர்கள். இவ்வளவு நன்மைகளை கொடுக்கும் அலுமினியம் ஃபாயில் பேப்பரை இனியும் தூக்கிப் போடுவீர்களா?

இதையும் படிக்கலாமே
ரோஜா செடி வளர்க்க ஆசையா? ஆசைப்பட்டால் மட்டும் போதாது! இதையும் கண்டிப்பாக தெரிஞ்சி வெச்சிருக்கணும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.