இத மட்டும் செஞ்சு பாருங்க இனி ஒரு கொசு கூட உங்க வீட்டு பக்கம் இல்ல, நீங்க இருக்க ஏரியா பக்கமே வராது. வீட்டில் கொசுவை விரட்ட ஒரு சூப்பரான ஐடியா.

- Advertisement -

இந்த கொசு தொல்லை தாங்க முடியல இது வெறும் டயலாக் மட்டும் இல்ல. உண்மையாவே கொசுக்கடி ஒரு பெரிய தாங்க முடியாத தொல்லை தான். அதுவும் இந்த கொசுக்களால் இப்போது பெயர் கூட தெரியாத பல வியாதிகள் பரவத் தொடங்கி விட்டது. இந்த கொசுக்கடி தொல்லையிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காத்துக் கொள்ள இயற்கையான முறையில் ஒரு கொசு விரட்டியை தான் இப்பொழுது தயார் செய்யப் போகிறோம். அதை எப்படி செய்வது என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் இந்த கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்க நம்மையும் நம்மைச் சுற்றி உள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருப்பது மிக மிக அவசியம். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமலும் குப்பைகளை கண்ட இடத்தில் சேர்க்காமல் இருந்தாலே ஓரளவிற்கு இந்த கொசு தொல்லையை கட்டுப்படுத்த முடியும். ஆனால் முழுவதுமாக கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாது. அதற்காக நாம் செயற்கையான இந்த லிக்விட், கொசுவத்தி சுருள் போன்றவற்றை பயன்படுத்தும் போது அது உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படுத்துகிறது. இயற்கையான முறையில் அந்த கொசுக்களை எப்படி விரட்டுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இயற்கையான முறையில் கொசு விரட்டி தயாரிக்கும் முறை:
இதற்கு பத்து சின்ன வெங்காயம், பத்து பல் பூண்டு இரண்டையும் தோல் நீக்காமல் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல மை போல அரைத்துக் கொள்ளுங்கள். நொச்சி இலை கிடைத்தால் அதையும் இத்துடன் சேர்த்து அரைத்துக் கொண்டால் இன்னும் பல மடங்கு பலன் கொடுக்கும்.

அரைத்த வெங்காய பூண்டு விழுதை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். கடுகு எண்ணெய் இல்லை என்றால் வேப்ப எண்ணையும் கூட இதில் கலந்து கொள்ளலாம். அடுத்ததாக ரெண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், பத்து சின்ன பில்லை கற்பூரத்தை தூள் செய்து அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது சேர்த்த அனைத்தையும் நன்றாக கலந்து வைத்து விடுங்கள். அடுத்ததாக ஒரு பெரிய நியூஸ் பேப்பர் எடுத்துக் கொள்ளலாம். அந்த நியூஸ் பேப்பரில் அரைத்து வைத்து விழுது முழுவதையும் பரவலாக தேய்த்து அப்படியே ஒரு இரவு முழுவதும் பேன் காற்றில் ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த விழுதை தேய்த்த நியூஸ் பேப்பர் நன்றாக காய்ந்து மொட மொடவென்று இருக்கும். இதை நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது ஒரு பத்து சுருள் அளவிற்கு கிடைக்கும்.

மாலை நேரத்தில் கொசு வருவதற்கு முன்பாக இதில் ஒரு ஒரு சுருளை மட்டும் எடுத்து ஒரு சின்ன பீங்கான் கப்பில் கொளுத்தி போட்டு விடுங்கள். இதிலிருந்து வரும் புகைக்கு ஒரு கொசு கூட வராது. அது மட்டும் இன்றி வீடும் நல்ல ஒரு மணதுடன் இருக்கும். இதனால் கொசு மட்டும் இன்றி மற்ற சின்ன சின்ன பூச்சிகள் வண்டுகள் போன்றவை கூட இந்த வாடைக்கு அண்டாது.

- Advertisement -

ஒரு முறை இதை செய்து வைத்துக் கொண்டால் போதும் பத்து நாள் பயன்படுத்தி கொள்ளலாம். உங்கள் வீட்டில் அறைகள் அதிகமாக இருந்த இன்னும் கொஞ்சம் கூட அதிகமாக அரைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சட்டையில் காபி, டீ கறை பட்டுவிட்டதா? கறை இருந்த இடம் தெரியாமல் உடனே போக செய்வது எப்படி? வாஷிங் மெஷினில் காலரில் இருக்கும் அழுக்கு போகவில்லையா? அப்படின்னா இத பண்ணுங்க!

கொசுவை விரட்ட நல்ல ஒரு எளிமையான வழி இது. உங்களுக்கு இந்த வழிமுறை பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா ஒரு கொசு கூட வராது.

- Advertisement -