- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்வில் சீக்கிரம் ஜெயிக்க சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

வாழ்வில் சீக்கிரம் ஜெயிக்க சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

- Advertisement -

வாழ்க்கையில் ஒரு மனிதன் ஓடி ஓடி உழைப்பது எதற்காக. எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக, சக்சஸ் என்ற வார்த்தையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, செய்யும் வேலை தொழிலில் எப்போதுமே வெற்றி காண வேண்டும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக வேண்டும், ஏமாற்றங்கள் இருக்கவே கூடாது. இதற்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன, சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வேலை தொழில் செய்பவர்களுக்கு மட்டும் இந்த மந்திரம் அல்ல. பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும், தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றாலும், இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஈசனை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.

- Advertisement -

அப்படி இல்லையென்றால் வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமை அன்று சிவன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுவது அதிசிறப்பு வாய்ந்த பலனை தரும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வாருங்கள். ஒரு சில காலகட்டத்தில் இந்த மந்திரம் உங்கள் வாயால் “லட்சத்து எட்டு” முறை உச்சரிக்கும் போது உங்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை அடையும்.

நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். நீண்ட நாள் முயற்சி செய்த நடக்காத காரியங்கள், வாழ்வில் இந்த இலக்கை எட்டவே முடியாது என்று ஒரு சில விஷயங்கள் இருக்கும். அந்த இலக்கை எல்லாம் அடைவதற்கும் உங்களுடைய திறமை மேலோங்கி நிற்கும். சரிங்க அந்த மந்திரம் தான் என்ன.

- Advertisement -

வெற்றி தரும் சிவ மந்திரம்.

ஹரி ஹரி, சிவ சிவ, நம நம, நமோ நமோ, நமோதீயாய

இதையும் படிக்கலாமே: 7-7-25 நாளை மைத்ரேய முகூர்த்த நேரம் மற்றும் பரிகாரம்

இவ்வளவு தான். இந்த மந்திரத்தை சொல்லத் தொடங்கியவுடன் நீங்கள் தீயாய் வேலை செய்ய துவங்கி விடுவீர்கள். மந்திரத்திற்கு பின்னால் அப்படி ஒரு சக்தி இருக்கிறது. உங்களுடைய பிள்ளைகளுக்கும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வெற்றிவாகை சூட முடியாமல் முயற்சிகளில் தடுமாறும்போது நிச்சயம் இந்த ஆன்மீகம் மந்திரம் உதவி செய்யும்.

சற்று முன்