திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் வரலாறு

sivan
- Advertisement -

ஜம்புகேஸ்வரர்
பஞ்சபூதத் தலங்களில் இந்தக் கோவில் நீருக்குரிய தலமாக அமைந்துள்ளது. ஜம்புகேஸ்வரரின் இந்த ஆலயமானது சோழர்களால் கட்டப்பட்டது. ஒரு முறை சிவனின் கட்டளையை ஏற்றுக்கொண்ட அம்பிகை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பூலோகத்தில் பெண்ணாக பிறந்த சக்திதேவி காவிரி நீரில் லிங்கம் செய்து அந்த ஈசனை வழிபட்டு வந்தாள். அந்த லிங்கத்தின் மூலம் அம்பிகைக்கு சிவன் காட்சி தந்தார். சக்தி தேவியால் நீரில் உருவாக்கப்பட்ட லிங்கம் என்பதால், இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமாக இன்றளவும் இருந்து வருகிறது.

jambukeswarar-temple

இந்தக் கோவிலில் மற்றொரு சிறப்பாக சிவன் வடிவில் அம்பாளும், அம்பாள் வடிவில் சிவனேம் பிரம்மஉற்சவத்தில் காட்சி தருவார்கள். இதற்கான ஒரு வரலாற்று கதையும் உண்டு.

- Advertisement -

ஒருமுறை பிரம்மாவிற்கு, தான் படைத்த பெண்ணை அடைய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதனால் பிரம்மனுக்கு ‘ஸ்திரி தோஷம்’ உண்டானது. இந்த தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரம்மா சிவனை நினைத்து தவமிருந்தார். பிரம்மனுக்கு உண்டான தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமான் கைலாயத்தில் இருந்து புறப்பட்டார்‌. அந்த சமயத்தில் தன்னுடன் இருந்த அம்பிகை நானும் வருவேன் என்று கூறினாள். சிவன் அம்பிகையிடம் ‘பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர். நீ என்னுடன் வருவது சரியல்ல’ என்று கூறிவிட்டார். ஆனால் அம்பிகை சிவனின் பேச்சை வழக்கம்போல மறுத்துவிட்டார். ‘நானும் நிச்சயம் உங்களுடன் வருவேன் என்று கூறினால் அம்பிகை.’

jambukeswarar-temple

அம்பிகை சிவனிடம் நான் “உங்களது வேடத்தில் நான் வருகின்றேன். நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள் என்று கூறினாள்”. சிவனும் இதனை ஏற்றுக்கொண்டு ‘சிவனாவர் சக்தி ரூபத்திலும், சக்தியானவள் சிவன் ரூபத்திலும்’ சென்றார்கள். சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த திருவிளையாடலானது நிகழ்த்தப்பட்டது. பின்னர் பிரம்மனுக்கு சிவனும் சக்தியும் பாவ மன்னிப்பு வழங்கினர்.  இன்றளவும் இந்த கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா சிவனை தியானம் செய்யும் சமயமானது அமைதியாக இருந்திருக்கும் என்பதால், இந்த உற்சவத்தில் மேளதாளங்கள் எதுவும் இசைக்க படாமல் இருக்கும்.

- Advertisement -

 jambukeswara-lingam

தல வரலாறு
பல வருடங்களுக்கு முன்பு ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அவரின் தவ வலிமையால் சிவபெருமான் அவருக்கு காட்சி தந்தார். ஜம்பு முனிவருக்கு சிவபெருமான் ஒரு நாவல் பழத்தை பிரசாதமாக கொடுத்தார். ஜம்பு முனிவருக்கு, சிவன் கொடுத்த பழம் அல்லவா அது.. இதனால் முனிவர் பக்தியுடன் அந்த பழத்தினை விதையோடு விழுங்கிவிட்டார். அவர் விழுங்கிய விதையானது வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலே மரமாக வளர தொடங்கியது. அவரின் தலை வெடித்து சிதறி முக்தி அடைந்தார். நாவல் மரத்திற்கு ஜம்பு என்ற மற்றொரு பெயரும் உண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்துள்ளது. ஜம்பு முனிவருக்கு முக்தி அளித்ததால் இந்த ஈஸ்வரர் ஜம்புகேஸ்வரர் என்ற பெயரினைப்பெற்றார் என்று கூறுகிறது தல வரலாறு.

jambukeswarar-temple

பலன்கள்
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கும், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமையவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும் இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாளையும் ஜம்புகேஸ்வரரையும் வேண்டிக்கொள்ளலாம்.

- Advertisement -

செல்லும் வழி
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் திருவானைக்காவல் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:
காலை 05.30AM – 01.00PM
மாலை 03.30PM – 08.30PM

முகவரி:
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்,
திருவானைக்காவல்-620005,
திருச்சி மாவட்டம்.

தொலைபேசி எண்
+91-431-2230 257.

இதையும் படிக்கலாமே
ருத்ராட்சம் போலியானதா? உண்மையானதா? கண்டுபிடிக்க எளிமையான வழி.

English Overview:
Here we have Jambukeswarar temple history in Tamil. Jambukeswarar temple details in Tamil. Jambukeswarar temple timings. Jambukeswarar kovil varalaru in Tamil.

- Advertisement -