காளியை நேரில் கண்ட சித்தரை பற்றி தெரியுமா

Kaali-1

“பெரும்பாலான ஞானிகளும், சித்தர்களும் அவர்கள் வாழும் காலங்களில், அப்போதைய சமூகம் அவர்களை தவறாகவே புரிந்து கொள்கிறது. இது எல்லா மகான்களுக்கும் ஏற்படுகின்ற ஒரு நிலை தான்” என “சுவாமி விவேகானந்தர்” கூறியிருக்கிறார். அப்படி கேரளாவில் வாழ்ந்த “பிராந்தர்” என்று அழைக்கப்பட்ட ஒரு சித்தரையும் அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தையும் பற்றி இங்கு காண்போம்.

munivar

கேரள தேசத்தில் பிராந்தர் எனும் சித்தர் வாழ்ந்து வந்தார். இவரது இயற்ப்பெயர் “நாராயணன்” என்றாலும் இவர் செய்யும் செயல்கள் பைத்தியம் பிடித்த மனிதரின் செய்கையை போன்று இருந்ததால், மலையாள மொழியில் “பைத்தியம்” என பொருள் படும் “பிராந்தர்” என்று பெயரிட்டு அழைத்தனர் அவ்வூர் மக்கள். இவர் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பார். மாலைவேளைகளில் அவ்வூரில் பிட்சை எடுப்பார். பின்பு மறுநாள் காலையில் எடைமிகுந்த பாறைக்கல்லை தூக்கிக்கொண்டு, அருகிலுள்ள மலையின் உச்சிக்கு செல்வார். பின்பு அந்த கல்லையே பீடமாக்கி, அதன் மீது அமர்ந்து நெடுநேரம் தியானம் செய்வார். தியானம் முடிந்த பின்பு அந்த பாறைக்கல்லை அந்த மலையுச்சிலிருந்து அடிவாரத்திற்கு உருட்டி விட்டு, அதன் பின்னாலேயே இவரும் ஓடிவருவார். இச்செயல்களை இவர் தினமும் செய்து வந்தார். இவர் செய்யும் இந்த செயல்கள் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் செய்கை போலிருந்த காரணத்தால் தான் அவ்வூர் மக்கள் இவரை பிராந்தர் என அழைத்தனர்.

ஒரு சமயம் பிராந்தர் அவ்வூரிலுள்ள மயானத்தில் இரவு நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் “மயான காளி தேவி” தோன்றி அந்த மயானத்தில் வளம் வந்து கொண்டிருந்தாள். அப்போது பிராந்தர் அங்கே உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு அவரருகே சென்று, தனது கால் சலங்கைகளைக் கொண்டு சத்தமெழுப்பினாள். அப்போதும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காத பிராந்தரை தன் காலால் எட்டி உதைத்து எழுப்பினாள். அப்போது உறக்கத்திலிருந்து எழுந்த பிராந்தர், காளி தேவியைக் கண்டும் எவ்வித சலனமும் இல்லாமலிருந்தார். தனது கோரமான தோற்றத்தையும் கண்டு பிராந்தர் அச்சமில்லாமல் இருப்பதால், இவர் நிச்சயம் ஒரு சித்தபுருஷராக தான் இருக்க வேண்டும் என்று அறிந்த காளி தேவி, தன்னிடம் பிராந்தர் நிச்சயம் ஏதாவது ஒரு வரத்தை கேட்க வேண்டும் என வற்புறுத்தினாள்.

Goddess Kali

அப்போது பிராந்தர் “ஒரு மனிதன் ஞான மார்கத்தில் உயர்நிலைக்கு செல்வது கடினம், அங்கிருந்து கீழ்நிலைக்கு வருவது சுலபம் என்பதை உணர்த்தவே நான் கஷ்டப்பட்டு மலையின் உச்சிக்கு பாறைக்கல்லை கொண்டுபோய் கீழே உருட்டிவிட்டேன். இதன் உட்பொருளை மக்கள் யாருமே புரிந்து கொள்ளாமல், மக்கள் என்னை பைத்தியம் என்று அழைத்தனர். அதில் எனக்கு சிறிது வருத்தம் உள்ளது. அதே நேரத்தில் மக்களை காக்கும் கடவுளான நீ, உனது கோர வடிவை கண்டு மக்கள் பயம் கொள்ளாமல், அவர்களுக்கு நல்லருளை பொழிய வேண்டும்” என காளியிடம் கூறினார் பிராந்தர். அதன் படியே நடப்பதாக காளியும் பிராந்தரிடம் கூறி மறைந்தாள். காலி தேவி அவருக்கு அளித்த வரமும் பலித்தது.

இதையும் படிக்கலாமே:
கேட்ட வரம் கிடைக்க உதவும் காளி காயத்ரி மந்திரம்

English Overview:
Here we have Pranthar siddhar history in Tamil. He is a famous siddhar who lived in kerala few hundred years ago.