ஜனவரி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

jan 2024
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அலைச்சல் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவர் கூறுவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்பி எந்த வேலையும் செய்யாமல் இருப்பது நன்மையை தரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்து சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை சாதகமான பலன்களை கிடைக்கும். இருப்பினும் வேலை ஒழுங்காக நடக்கிறதா என்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானமாக செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு சீராக இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உடல் நலனில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வீண் பேச்சை தவிர்க்க வேண்டும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது கவனமாக பேசுவது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரகசியங்களை பிறரிடம் கூறுவதை தவிர்ப்பது நன்மை உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு குலதெய்வ வழி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கை நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். அதனால் அனுகூலங்கள் உண்டாகும். விருப்பங்கள் கைகூடும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். ஒரு சிலருக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைத்து அதன் மூலம் சலுகைகளையும் பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகள் வெற்றியடையும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே கிடைக்கும். வரவிற்கு ஏற்ற செலவு ஏற்படும். உடல் நலத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். உயர் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடப்பதன் மூலம் மூலம் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. ஓரளவுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். புதிதாக எந்த முதலீடும் செய்வதை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மையான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகமாகவே இருக்கும். அதனால் ஒரு சிலருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுவரை இருந்து வந்த குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை நண்பர்களின் உதவியுடன் திறம்பட செய்து முடித்து பதவி உயர்வு பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். கிடைத்த லாபத்தை சேமித்து வைப்பதன் மூலம் மாத பிற்பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுபிட்சமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் பல பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைத்து அந்த வேலையை செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் இருப்பவர்களை நம்பி எந்தவித பொறுப்பையும் ஒப்படைக்காமல் செயலாற்றுவது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாகவே திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதை சுப விரயமாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பல நல்ல முன்னேற்றத்தை காண முடியும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய தொழிலை மேற்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலை முன்னேற்ற பாதை நோக்கி கொண்டு செல்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படாது என்பதால் செலவுகள் செய்யும் பொழுது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைத்தால் தான் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம் திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். புதிதாக வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். திறமையை வெளிப்படுத்த அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சவால்களை சந்திக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. பணவரவை விட அதிகமான செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவது நன்மையைத் தரும். ஒரு சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பது சிறிது கடினமாகவே இருக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விவேகத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதைவிட அதிகமாகவே செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தேவை இல்லாமல் கோவப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவால் வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளை கண்ணும் கருத்துமாக செய்வதன் மூலம் நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -