ஜாதக யோகங்களால் பலன் இல்லையா ? இதை செய்யுங்கள் போதும்

astrology

சிலருக்கு ஜாதகத்தில் பல அற்புதமான யோகங்கள் இருக்கும் ஆனால் அந்த யோகங்கள் மூலமாக எந்த பயனையும் அனுபவிக்க முடியாத சூழல் இருக்கும். சிலருக்கு ஜாதகத்தில் பெரிதாக எந்த யோகமும் இல்லாதது போல தெரியும் ஆனால் அவர்கள் வாழ்வில் பன்மடங்கு உயர்வர். இதற்கு காரமாக விளங்குவது ஒருவருடைய ஜாதகத்தின் லக்கினமும் லக்கினாதிபதியும் தான்.

astrology

ஜாதகத்தை பொறுத்தவரை லக்னம் தான் உயிர் நாடியாக விளங்குகிறது. ஒருவரின் வாழ்வில் நிகழும் ஏற்ற இறக்கங்கள், அவரின் எண்ணங்கள், செயல்கள் இப்படி வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகளுக்கு அடித்தளமாக இருப்பது லக்னம் தான். ஒருவருக்கு எத்தனையோ யோகங்கள் இருந்தும் லக்னம் மற்றும் லக்னாதிபதி கெட்டால் அந்த யோகங்களினால் எந்த பயனும் பெறமுடியாது. துன்பமும் துயரமுமே அந்த ஜாதகருக்கு இறுதியாக மிஞ்சும்.

இதையும் படிக்கலாமே:
விபரீத ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா ? வாருங்கள் பார்ப்போம்

யோகங்கள் பெரிதாக இல்லாத ஜாதகருக்கு லக்னம் மற்றும் லக்னாதிபதி பலமாக இருந்தால் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும் எளிதில் விலகும். வாழ்வில் அந்த ஜாதகர் ஏற்றம் காண்பார். ஜாதகத்தில் ல என்று குறிப்பிட்டிருக்கும் இடம் தான் லக்கினம் ஆகும். லக்னம் மற்றும் லக்னாதிபதி பலம் குன்றி இருந்தால் தியான நிலையில் உள்ள ஆஞ்சநேயரை முறையாக வழிபாட்டு வந்தால் போதும் தடைகள் விலகி யோகங்கள் பெருகும். இதுவே லக்னம் மற்றும் லக்னாதிபதி பலம்பெற மிக எளிய பரிகாரமாகும்.