ஜாதகத்தில் 1, 5, 9 ஆம் இடங்களின் பலன்கள் பற்றி தெரியுமா?

astro

ஜோதிட கலையை பொறுத்தவரை உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதகம் இருக்கிறது. ஆனால் பல கலாச்சாரங்களில் ஜோதிடக்கலைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாததால் அவர்கள் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நமது நாடு மற்றும் கீழை நாடுகளில் ஜோதிடக்கலை இன்றளவும் பின்பற்றப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் இருக்கும் ராசிக்கட்டங்கள் அல்லது வீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை எவை என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

Nakshatra

ஒரு ஜாதகத்தில் லக்னம் எனப்படும் 1 ஆம் வீடு, லக்னத்திலிருந்து 5 மற்றும் 9 ஆம் வீடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் லக்னம் எனப்படும் உடலாரோக்கிய நிலை, உடல் மற்றும் முக தோற்றம் மற்றும் வாழ்க்கையின் அடிப்படையான விடயங்களை தீர்மானிக்கும் ஒரு வீடாகும். 5 ஆம் இடம் என்பது ஒரு மனிதனின் பூர்வ புண்ணிய நிலை, புத்திர பாக்கியம், புத்தி போன்றவற்றை தீர்மானிக்கும் இடங்களாகும். 9 ஆம் இடம் என்பது ஒரு மனிதனின் ஆன்மீக ஈடுபாடு, பூர்வீக சொத்துகள், செல்வம் சேகரிக்கும் திறன் போன்றவற்றை பற்றி தீர்மானிக்க கூடிய இடமாக இருக்கிறது.

மேற்கண்ட 1, 5, 9 ஆம் இடங்கள் ஒருவரின் ஜாதகத்தில் சிறப்பாக அமையப்பெற்றால் அவர்களின் வாழ்வில் குறைகள் ஏதும் இருக்காது. 1, 5, 9 ஆகிய இடங்களில் ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தால் அந்த நபருக்கு அரசு உயர் பதவிகள், சொகுசான வாழ்க்கையும் கிட்டும். 1, 5, 9 ஆகிய இடங்களில் உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசியல் வாழ்க்கையில் மிக பிரபலமடைந்து, அரசனுக்கு நிகரான வாழ்க்கை உண்டாகும்.

jathagam astro

1, 5, 9 ஆகிய இடங்களில் நட்பு, சமம் பெற்ற கிரகங்கள் இருந்தால் எந்த ஒரு விடயத்திலும் சிறிது முயற்சி செய்தாலே வெற்றிகளை பெற முடியும். மேற்கூறிய இடங்களில் பாப கிரகங்கள் இருந்தால் வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். மேற்சொன்ன மூன்று இடங்களிலும் சுப கிரகங்கள் இருந்தால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.

- Advertisement -

1, 5, 9 ஆகிய இடங்களில் லக்னம் எனப்படும் 1 ஆம் வீட்டில் மட்டும் சுப கிரகங்கள் இருந்தால் சுய முயற்சியாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியாலும் பொருளீட்டுவார்கள். 5 ஆம் வீட்டில் மட்டும் சுபகிரகங்கள் இருந்தால் முன்னோர்கள் அல்லது தங்களுக்கு பிறந்த வாரிசுகளின் சம்பாத்தியம் மூலம் சுக போகங்களை அனுபவிப்பர். 9 ஆம் இடத்தில் மட்டும் சுபகிரகங்கள் இருந்தால் தங்களின் கடின உழைப்பினால் மட்டுமே செல்வம் சேர்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே:
கேதார யோகம் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Jathagam ragasiyam in Tamil. It is also called as Jathagam veedu in Tamil or Jathagam veedu palangal in Tamil or Jathagam kattangal in Tamil or Thirikonam palan in Tamil.