கேதார யோகம் பலன்கள்

ஜாதகத்தில் ஏற்படும் யோகம் என்பது ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் இருக்கின்ற கிரகங்களின் அமைப்பை கொண்டு ஏற்படுவதாகும். பிறக்கின்ற அனைத்து மனிதர்களின் ஜாதகத்திலுமே யோகங்கள் இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் ஒரு சிலருக்கு ஜாதகத்தில் ஏற்படும் யோகங்கள் மிகவும் அபூர்வமாகவும் அதே நேரத்தில் அந்த ஜாதகருக்கு பல நன்மைகளை தருவதாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு யோகம் தான் “கேதார யோகம்”. இந்த கேதார யோகம் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களை தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் ராசிக்கட்டத்தில் ஏதேனும் 4 ராசி வீடுகளில் இருக்கும் பட்சத்தில் கேதார யோகம் ஏற்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களின் கணிப்பு படி இந்த கேதார யோகம் உலகில் பத்து சதவீதம் மனிதர்களுக்கே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். எனவே இந்த கேதார யோகம் ஒரு அபூர்வ யோகமாகவே கருதப்படுகிறது.

கேதார யோகத்தில் பிறக்கும் நபர்களின் குடும்பம் பெரும்பாலும் செல்வச்செழிப்பு நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு பூமிகாரகனான செவ்வாய் பகவானின் அருள் அதிகம் இருப்பதால் பல ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர். விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் மூலம் நிறைந்த செல்வம் பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். தன்னடக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆன்மீக சம்பந்தமான விடயங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பர்.

இவர்களின் வீடு பெரும்பாலும் மரங்கள், செடிகள் சூழ்ந்த இயற்கை இடங்களிலேயே அமைந்திருக்கும். இவர்கள் பயன்பாட்டிற்காக ஒன்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும். இந்த யோகம் கொண்ட சிலருக்கு வாகனம் சம்பந்தமான தொழிலிலும் மிகுந்த லாபங்கள் உண்டாகும். விருந்தோம்பல் குணம் அதிகம் கொண்டவராக இருப்பார்கள். அவ்வப்போது வகை வகையான உணவுகள் செய்து, பலருக்கு அன்னதானம் படைத்தது மக்களின் பசியை போக்கும் கொடையாளிகளாக இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:
செல்வம், செல்வாக்கு தரும் முசல யோகம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kedara yoga in Tamil. It is also called Jathaga yogangal in Tamil or Jothida yogam in Tamil or Jothida yogangal in Tamil.