உங்களுக்கு அரசு வேலை, உயர்ந்த பதவிகள் கிடைக்க ஜாதகத்தில் இவை இருந்தால் போதும்

surya

பூமியில் வாழ்கின்ற பெரும்பாலான மனிதர்கள் அன்றாடம் மிகக் கடுமையாக உழைத்து பொருளீட்டுகின்றனர். எனினும் அவர்களால் சொகுசாக வாழும் அளவிற்கு செல்வ வளங்களை பெற முடிவதில்லை. வேறு சிலரோ சிறிது காலமே உழைத்தாலும், குறுகிய காலத்தில் மிகப் பெரும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறுகின்றனர். இப்படி திடீர் உயர்வுகள் ஏற்பட அவர்களின் ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். திடீர் யோகங்கள் பற்றியும் அவை எவ்வாறு ஏற்படுகின்றன என்பதையும் இங்கே தெரிந்து கொள்வோம்.

Nakshatra

வாழ்வில் திடீரென ஏற்படும் அதிர்ஷ்டங்களுக்கும் மற்றும் எதிர்பாராத பாதகமான நிகழ்வுகளுக்கும் ஜாதகத்தில் 8 வீடு காரணமாக அமைகிறது. 8 ஆம் இடம் என்றாலே பாதகமான பலன் தர கூடியது என்றும் அந்த இடம் எவ்வாறு யோகங்களை தரும் என்கிற ஐயம் அனைவருக்குமே உள்ளது. எனவே தான் இந்த 8 ஆம் வீட்டால் ஏற்படும் யோகம் யாருக்கும் எதிர்பாராத நேரத்தில், மிக பெரிய அளவில் உண்டாகிறது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 8 ஆம் வீட்டு காரகனான சனி பகவான் இருக்கிறார். “சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை” என்கிற பழமொழி பலர் அறிந்ததே. எனவே இந்த எட்டாம் வீட்டின் சுப கிரகங்கள் இருந்தாலும், இதில் இருக்கின்ற கிரகம் சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை பெற்றாலும் திடீர் யோகங்களும், அதே எட்டாமிடம் அசுப தன்மை கொண்ட கிரக சேர்க்கை, பார்வை பெற்றால் மிகப்பெரிய பாதகங்களும் உண்டாகிறது.

jathagam astro

ஜாதக கட்டத்தில் மொத்தம் 12 வீடுகள் இருக்கின்றன. இந்த 12 வீடுகள் அனைத்தும் நவகிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டதாக இருக்கிறது. இதில் எட்டாம் வீட்டில் சூரியன் இருந்து சுப கிரக சேர்க்கை பெற்றால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எட்டாமிடத்தில் இருந்து அந்த சூரியன் சுபகிரகங்களின் சேர்க்கை பெற்றால் அந்த ஜாதகர் யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு தேசத்திற்கே தலைவராக கூடிய யோகம் பெறுவார். பொது மக்களின் நலன்களைக் கருதி போராட்டங்கள் செய்து மக்களின் செல்வாக்கைப் பெற்று,அரசியல் வாழ்வில் வேகமான வளர்ச்சியைக் காண்பார்கள். இவர்களுக்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்.

suriyan

நீண்ட காலமாக ஒரே வேலையில் இருப்பவர்களுக்கு திடீரென மிக உயரிய பதவிகள் கிடைக்கும். ஊதியமும் பல மடங்கு உயரும். இவையெல்லாம் ஜாதகரே எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். தங்கள் நிலத்திற்கு நீண்டகாலமாக நிலப்பட்டா வேண்டி காத்திருந்தவர்களுக்கு திடீரென நிலப்பட்டா பத்திரம் அரசாங்கத்தால் வழங்கப்படும். தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் அவர்களே எதிர்பாராத மிகப் பெரும் லாபம் தரும் வகையிலான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சிலருக்கு எதிர்பாராத வகையில் அரசு வேலை, அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் நட்பும், அவர்களால் அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவார்கள். வங்கிக் கடன் மிக குறுகிய காலத்திலேயே கிடைக்கப் பெறுவார்கள். ஒரு சிலர் திடீர் வெளிநாடு பயணங்கள் செல்லும் யோகமும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் தரும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Jathagathil suriyan palangal in Tamil. It is also called as Jathagam kattam in Tamil or Jathaga yogangal in Tamil or Jathagam kanippu in Tamil or 8 aam veedu in Tamil.