சொத்து, குடும்ப செல்வாக்கு போன்றவை உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கு ?

astrology

ஒருவருக்கு இனிதான குடும்பம் அமைவதும், குடும்பத்தின் சொத்துகள், மூதாதையர்கள் வழியாகச் சேரும் பாவம் புண்ணியம், குடும்பப் பாரம்பர்யம் ஆகியவற்றைத் தீர்மானிப்பது ஒருவரது ஜாதகத்தின் இரண்டாமிடமாகும்.

astrology

வாக்கு வன்மை, பிறரை, தன் சொல்லுக்குக் கட்டுப்பட வைப்பது. கணீர்  குரலில் பேசுவது, எதிரும் புதிருமாகப் பேசுவது ஆகியவற்றுக்கு  ஜாதகக் கட்டத்தின் 2 -ம் இடமே காரகத்துவம் பெறுகிறது.

முன்னோர்கள் சேர்த்துவைத்த செல்வம், தான் உழைத்துச் சேர்த்த செல்வம், கற்ற கல்வியால் பெற்ற செல்வம், இவை யாவற்றுக்கும் 2 – ம் இடம் மற்றும் அங்கு நிற்கும் கிரகங்களைக்கொண்டு தெரிந்துகொள்ளலாம். இதனால்தான் இரண்டாம் பாவத்தை ‘தனம்’ ‘குடும்பம்’, ‘வாக்கு’ஸ்தானம் என்பார்கள்.

astrology

ஜாதகத்தில்  2 – ம் பாவம் மற்றும் அந்த இடத்தில் நிற்கும் கிரகங்களின்  பலன்கள்:

- Advertisement -

* 2 – ம் பாவத்தில் சுபகிரகங்களான சந்திரன், குரு, புதன், சுக்கிரன் நின்று இருந்தால், குடும்பத்தில் சந்தோஷத்துக்குக் குறைவு இருக்காது. அதிலும் இந்தக் கிரகங்கள், ஆட்சி, உச்சம், நட்பு, சமம் என்ற நிலையில் நின்றுயிருந்தால், தெய்விகக் குடும்பம் போல் காட்சி தரும். மற்றவர்களுக்கு இவர்கள் நல்ல முன்மாதிரியாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் எப்போதும் நிறைந்திருக்கும்.

sukran

* 2 – ம் பாவத்தில் சூரியன், செவ்வாய் நின்று இருந்தால், கணவன் மனைவிக்குள் விவாதங்கள் அதிகமாக இருக்கும். அதிலும், இந்தக் கிரகங்கள் ஆட்சி, உச்சம்,  நட்பு, சமம் என்ற நிலையில் இருந்தால், சிறுசிறு சச்சரவுகள் இருந்தாலும், குடும்ப கெளரவம் கருதி, ஒற்றுமையாக இருப்பார்கள்.

Suriya bagavaan

* 2- ம் பாவத்தில் சனி, ராகு, கேது நின்று இருந்தால், குடும்பத்தில் மன நிம்மதி குறையும். பணக்கஷ்டம் இருக்கும். இதனால் மகிழ்ச்சி இருக்காது. ஜாதகத்தின் நிலையை உணர்ந்து, சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுத்தும் வாழ்வது நல்லது. இத்தகைய ஜாதகர்களுக்கு வரன் பார்க்கும்போது, இதே அமைப்புள்ள ஜாதகரையே இணைக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது மற்ற கிரகங்களின் வலிமையையும் ஆய்வுசெய்து சேர்த்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

sani-bagavaan

பரிகாரம்:

ஜாதகக் கட்டத்தில் 2-ம் இடத்தில் சூரியன் இருந்தால், தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் அருகே இருக்கும் ‘சூரியனார்கோயில்’ சென்று வழிபட்டு வந்தால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

ஜாதகத்தில் 2 – ம் இடத்தில் செவ்வாய் இருப்பவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமியை வணங்கி வந்தால், செவ்வாய் அனுக்கிரகம் கிடைத்து குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

astrology wheel

ஜாதகத்தில் 2 – ம் இடத்தில் சனி உள்ளவர்கள் திருநள்ளாறு சென்று பூஜை செய்து சனீஸ்வர பகவானை வழிபட்டால், நல்ல மாற்றங்கள் நிகழும். மேலும் சனிக்கிழமைதோறும் காகங்களுக்குச் சாதம் வைத்துவிட்டு உணவருந்தினால் உடனடி பலன் கிடைக்கும்.

ஜாதகத்தில் 2 – ம் இடத்தில் ராகு இருப்பவர்கள் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்துவந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்கை வழிபாடுசெய்தால், குடும்பத்தில் அமைதி நிலவும்.

astrology

ஜாதகத்தில் 2 – ம் இடத்தில் கேது இருப்பவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்பெரும்பள்ளத்தில் இருக்கும் நாகநாத சுவாமிக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால், குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும்.

இதையும் படிக்கலாமே:
விபரீத ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா ? வாருங்கள் பார்ப்போம்

ஆண்டுக்கு ஒரு முறை நவகிரக ஸ்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது. இப்படிச் செல்லமுடியாதவர்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் சிவன் கோயிலில் இடம்பெற்றிருக்கும் நவகிரகங்களை இதயசுத்தியுடன் வழிபட்டு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்” என்றார்.

ஜோதிடம், ஜாதகம், ராசி பலன், ஆன்மிக தகவல்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற எங்களுடைய முக நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.