யாரோ விட்ட சாபத்தால், உங்களுடைய குடும்பம் தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறதா? பல தலைமுறை சாபத்தையும் நீக்கக் கூடிய சக்தி, இந்த 3 பொருளுக்கு உண்டு.

sabam
- Advertisement -

சில குடும்பங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் முன்னேற்றத்தை அடையாமல், வறுமையில் வாடிக்கொண்டிருக்கும். என்னதான் பிரச்சினை என்று ஜாதக கட்டத்தை எடுத்து அலசி ஆராய்ந்து பார்த்தால் அந்த குடும்பத்திற்கு வரக்கூடிய கஷ்டத்திற்கு, எந்த ஜென்மத்திலோ, யாரோ விட்ட சாபம் தான் காரணமாக இருக்கும். கடன் தொல்லை இருக்கும். நோய் நொடிகளால், பணவிரயம் ஏற்படும். வருமானம் வந்தும், அதை அவர்களால் நல்லபடியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள யாராவது ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். திருமணம் நடந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். இப்படியாக எந்த ஒரு நல்லதையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஒரு குடும்பத்தில் நிலவினால், அதற்கு நிச்சயமாக யாரோ என்றைக்கோ, எதற்காகவோ விட்ட சாபமும் ஒரு காரணமாக இருக்கும்.

sad

சாபம் என்பது தானாக முளைத்து வருவது கிடையாது. நாம் செய்த பாவத்திற்கான தண்டனையை சாபம். ஆக காசு பணத்தை சேர்கின்றமோ இல்லையோ, பாவத்தை நம்முடைய குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கக்கூடாது. முடிந்தவரை புண்ணியத்தை சேர்த்து வைக்க பாருங்கள். சரி, இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற நம்முடைய வீட்டிலேயே சுலபமான முறையில் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றிய சிறிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள். கொட்டைப்பாக்கு, பச்சரிசி, குங்குமம், சிவப்பு நிற துணி அவ்வளவுதான். கொட்டைப்பாக்கு என்பது பிரம்மனுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. நம் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி அந்த பிரம்மனுக்கு தான் உள்ளது அல்லவா? இந்த கொட்டைப் பாக்கை  பரிகாரத்திற்க்கு கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிவப்பு நிற குங்குமம் சக்தியின் ஸ்வரூபம். நமக்கு வரக்கூடிய கெடுதலை அழிக்கவல்லது.

kottai-pakku

அடுத்தபடியாக எல்லா சுப காரியத்திற்கும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய பொருள் பச்சரிசி. நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுப்பது. இந்தப் பொருட்களை எல்லாம் எப்படி பரிகாரத்திற்கு பயன் படுத்துவதலாம். முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு தட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் சிவப்பு நிறத் துணியை விரித்துக் கொள்ளுங்கள். முதலில் பிரம்மதேவனை நினைத்து உங்கள் தலையெழுத்து மாற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு 3 மூன்று கொட்டை பாக்குகளை சிவப்பு நிறத் துணியில் வையுங்கள். அதன் பின்பு உங்களுடைய வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் சுபிட்சம் நிறைந்து இருக்க வேண்டும் என்று ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை வைக்க வேண்டும். அந்த பச்சரிசியின் மேல் சிறிதளவு குங்குமத்தை தூவி, இதை அப்படியே சேர்த்து ஒரு சிறிய முடிச்சாக கட்டி கொள்ளுங்கள். (சிவப்புத் துணியில் கொட்டைப்பாக்கு, பச்சரிசி, குங்குமம் 3 பொருட்களையும் வைத்து முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும்.)

pachcharisi

உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷம் விலகவேண்டும். சாப விமோசனமும் பெறவேண்டும் என்ற படி வேண்டிக் கொண்டு, இந்த முடிச்சை உங்கள் வீட்டு பூஜையறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கை படாத இடமாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வருடம் இந்த முடிச்சு அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.

kungumam

ஒரு வருடம் கழிந்த பின்பு இந்த முடிச்சை கொண்டுபோய் ஓடும் ஆற்றிலோ அல்லது சமுத்திரத்திலே போட்டு விடவேண்டும். கட்டாயம் ஓடும் தண்ணீரில் விட்டால் உங்களுடைய சாபம் கரைந்து ஓடிவிடும். தண்ணீரில் போடவே முடியாது என்ற சூழ்நிலை உங்களவர்களாக இருந்தால், மனிதர்கள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் கொண்டு போய், உங்கள் வீட்டில் இருந்து தூரமாக எடுத்துக்கொண்டு போய், ஏதாவது ஒரு இடத்தில் அந்த முடிச்சினை போட்டு விட்டு வரலாம்.

amman

நிச்சயமாக இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை அந்த ஒரு வருடத்தில் உங்களால் உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பரிகாரத்தோடு சேர்த்து, இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து கொண்டே வர வேண்டும். இந்த உதவி, அந்த உதவி தான் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. உங்களால் எந்த உதவியை அடுத்தவர்களுக்கு செய்யமுடியுமோ, நன்மை தரக்கூடிய உதவியை செய்து கொண்டே வாருங்கள். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -