தினம் தினம் வானத்தில் எத்தனையோ அரிய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்பது கிரகங்களும் மாறி மாறி ஒவ்வொரு இடத்தில் அமரும்போது, ஒவ்வொரு வகையான சூழல் இந்த உலகத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்திலும் செவ்வாய்க் கேது சேர்க்கை, சிம்மத்தில் நடைபெறுவதாக ஜோதிட ரீதியாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த கிரஹ சேர்க்கை வரும் போது பூமியில் சில எதிர்பாராத விபத்துக்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையும் நமக்கும் அப்படித்தான் இருக்கிறது. எதிர்பாராத பெரிய பெரிய விபத்துகளின் மூலம் பெரிய பெரிய உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த கிரகச் சேர்க்கையின் மூலம் 12 ராசிக்காரர்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக யாரும் பயப்பட வேண்டாம். ஜூலை மாதம் முடியும் வரை இந்த கிரகத்தினால் பாதிப்புகள் உண்டாகும் என்பது ஜோதிடர்களின் கணிப்பு.
பின் சொல்லக்கூடிய ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றும்போது இந்த கிரக சேர்க்கையின் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். அது என்ன வழிபாடு என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஹனுமன் வழிபாடு
ஹனுமன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு. இந்த இக்கட்டான காலகட்டத்தில் நம்மை காப்பாற்ற போகும் வழிபாடு இந்த இரண்டு வழிபாடுதான். ஹனுமனை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம். ஆனால் இந்த குல தெய்வ வழிபாடு செய்வது என்றால் குலதெய்வம் மனது வைத்தால் மட்டும் தான் முடியும். சில பேருக்கு குலதெய்வம் தெரியாது. சில பேருக்கு குலதெய்வ கோவிலுக்கு போக நல்ல நேரம் கை கூடி வராது. எதுவாக இருந்தாலும் நீங்கள் அனுமனை கும்பிடுங்கள். உங்களை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் செல்லக்கூடிய வேலையை அந்த ஹனுமன் பார்த்துக்கொள்வார்.
வீட்டு பக்கத்தில் ஒரு அனுமன் கோவிலை தேடி கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அனுமனுக்கு 2 துளசி இலைகளை பாதத்தை சமர்ப்பணம் செய்துவிட்டு, “ஜெய் வீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ஜெய்” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே அனுமனை 9 முறை வலம் வரவேண்டும். பிறகு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்க வேண்டும். வீட்டு பக்கத்தில் ஹனுமன் கோவில் இல்லையா.
வீட்டிலேயே பூஜை அறையில் இருக்கும் ஹனுமனது திரு உருவப்படம் அல்லது பெருமாள் படத்திற்கு முன்பு இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, நின்ற இடத்தில் இருந்து 9 முறை சுற்றிக் கொள்ளுங்கள். தினம் தினம் இந்த மந்திரத்தை ஒன்பது முறை சொல்ல தவற விடாதீங்க. எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து இந்த ஆஞ்சநேயர் மந்திரம் உங்களை காப்பாற்றி கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க செவ்வாய் கிழமை முருகர் தீப வழிபாடு
எந்த கிரக சேர்க்கையாலும், உங்களுக்கு எதிர்பாராத விபத்து, ஏதாவது விபரீதமான பிரச்சனைகளோ வரவே வராது. உங்களுடைய குடும்ப நலனுக்காகவும் இந்த பிரார்த்தனையை நீங்கள் அனுமனிடம் வைக்கலாம். இன்று இந்த உலகம் இருக்கும் சூழ்நிலையில் இந்த வழிபாடு அனைவருக்கும் தேவை. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய பதிவினை விரைவு செய்து கொள்வோம்.