- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேலை கிடைக்க செவ்வாய் கிழமை முருகர் தீப வழிபாடு

வேலை கிடைக்க செவ்வாய் கிழமை முருகர் தீப வழிபாடு

- Advertisement -

இன்று செவ்வாய்க்கிழமை. 17-6-2025 இன்றைய நாளில் தேய்பிறை சஷ்டி திதியும் இருக்கிறது. இன்று மாலை முருகனுக்கு இந்த விளக்கை ஏற்றி, இந்த மந்திரத்தை சொன்னால், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை வேலை கிடைக்க முருகனுக்கு ஏற்ற வேண்டிய தீபம் என்ன. சொல்ல வேண்டிய மந்திரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்ற முடியும் என்றாலும் ஏற்றலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இந்த விளக்கை ஏற்றுவதாக இருந்தாலும் ஏற்றலாம். ஒரு சின்ன பாக்கு மட்டை தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 கைப்பிடி அளவு துவரம் பருப்பு வையுங்கள். அதன் மேலே இரண்டு சின்ன மண் அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி, முருகனுக்கு 2 மாம்பழம் நெய்வேத்தியம் வைக்க வேண்டும்.

- Advertisement -

முருகப் பெருமானுக்கு முன்பு இந்த விளக்கை வைத்துவிட்டு உங்களுடைய கோரிக்கைகளை வைக்க வேண்டும். இது மாம்பழ சீசன். ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்கவில்லை. ஞானப்பழத்தை இந்த கலியுகத்தில் நம்மால் சென்று தேட முடியாது. ஞானப் பழத்திற்கு இணையாக இருக்கக்கூடிய மாம்பழத்தை வாங்கி முருகப்பெருமானுக்கு நெய்வேதியமாக வையுங்கள். முருகப்பெருமானுக்கு கிடைக்காத அந்த ஞானப் பழத்தை இந்த நாளில் நெய்வேத்தியமாக வைத்து முருகப் பெருமானிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே கிடைக்கும்.

அன்று மயில் மீது ஏறி உலகத்தை சுற்றுவதற்காக சென்ற முருகப்பெருமானுக்கு ஞானப்பழம். கிடைக்கவில்லை. இன்று இந்த உலகத்தையே காக்கும் முருகப்பெருமானுக்கு மாம்பழத்தை நாம் நெய்வேத்தியமாக வைத்து வேண்டிக் கொள்ளும் போது, நிச்சயம் நம்முடைய வேண்டுதல் பலிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. நம்பிக்கை இருந்தால் மேலே சொன்னபடி இன்று மாலை வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். நிச்சயமாக உங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு முக்கியமான விஷயம். விளக்கை ஏற்றி வைத்துவிட்டு முருகன் முன்பு இந்த மந்திரத்தை சொல்ல மறக்காதீங்க.

- Advertisement -

முருகன் மந்திரம்

ஓம் சரவணா சரணம்
ஓம் சண்முகா சரணம்
ஓம் கந்தா சரணம்

ஓம் கடம்பா சரணம்
ஓம் குமாரா சரணம்
ஓம் முருகா சரணம்
ஆறுபடை முருகனுக்கு அரோகரா

- Advertisement -

என்ற இந்த மந்திரத்தை மனமுருக சொல்லிவிட்டு, சரணாகதியோடு வழிபாட்டை கற்பூர ஆரத்தி காண்பித்து நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிப்பாட்டை முடித்துவிட்டு அந்த மாம்பழங்களை வீட்டில் இருப்பவர்கள் பகிர்ந்து உண்ணலாம். முடிந்தால் யாரேனும் இரண்டு ஏழைக்கு தானமாகவும் கொடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: நாளை 18-06-2025 புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி

இந்த எளிமையான வழிபாடு முருகப்பெருமானுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த வழிபாட்டை நீங்கள் செய்த உடனே சந்தோஷத்தில் முருகப்பெருமான் நீங்கள் கேட்ட வரத்தை கொடுத்து விடுவார். தவற விடாதீங்க. எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்