ஜூலை மாத ராசிபலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

july-rasi-palan
- Advertisement -

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமையவிருக்கிறது. எதிர்காலம் எத்துணை சவால்களையும் எளிதாக போராடி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ கூடுமானவரை உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்தி விட்டு கொடுத்து செல்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஏற்படும் போட்டிகள் நீங்கும். பெண்களுக்கு திருமண தடைகள் விலகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்யம் சீராகி வரும். வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல மாதமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகள் படிப்படியாகக் குறையும். நல்ல சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மற்றவர்களை வியக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பெரிய தொகையை ஈடுபடுத்தும் விஷயங்களில் சற்று எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு உடனிருப்பவர்களே உபத்திரவம் செய்ய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். அங்காள பரமேஸ்வரி வழிபாடு செய்து வாருங்கள் துன்பம் எல்லாம் தீரும்.

- Advertisement -

மிதுனம
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பான லாபம் காண பெறுவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கஷ்டகாலம் மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகம் தொடர்பான பணியிடை மாற்றம், ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு போன்றவற்றை சாதகமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். மேல் அதிகாரிகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண முடியும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சங்கடங்கள் தீர சங்கடஹர விநாயகரை வழிபடுதல் சிறப்பு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதில் எச்சரிக்கை தேவை. நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் எனவே எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்து விட்டு பின்னர் முடிவெடுத்து கொள்வது நலம் தரும். குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த மாற்று வழியில் சிந்திப்பீர்கள். சில அதிரடி மாற்றங்கள் மூலம் நல்ல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கப் பெறும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கந்த வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். வேலை தொடர்பான விஷயங்களுக்காக வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் சேர்க்கைக்கு உரிய திட்டமிடல் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை மனதிற்கு திருப்தி அளிக்கும் வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். ஆதிகேசவன் வழிபாடு செய்வது நல்லது.

கன்ன
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நினைத்தபடியே நடக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம், போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வர வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முருக வழிபாடு நன்மைகளைத் தரும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரும் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. பக்கத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்ததை சாதிக்க காட்டக்கூடிய உங்களுடைய தன்னம்பிக்கை மென்மேலும் வளரும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள், அதன் மூலம் அதிக லாபம் காண முடியும். பிள்ளைவரம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் எல்லாம் கிடைக்கப் பெறும். தொலைதூரப் பயணங்களின் பொழுது உடைமை மீதும் கவனம் செலுத்துங்கள். பெண்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரும் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. எதிலும் வெற்றி வாகை சூட இருக்கின்றீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ கூடுமானவரை விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணியிடங்களில் நீயா நானா போன்ற ஈகோ பிரச்சனைகளை தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். சக பணியாளர்களுடன் இணக்கமாக செல்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பெண்களுக்கு வேண்டியது கிடைக்கும். ஆரோக்கியம் படிப்படியாக சீராகி வரும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது உத்தமம். எதிலும் நிதானம் தேவை. சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. எதையும் மனதிலேயே பூட்டி வைத்துக் கொண்டு இருந்தால் முடிவு என்பது கிடைக்காமல் போய்விடும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் ஏற்படும். பணியாளர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு பாராட்டுகளைப் பெறும் யோகமுண்டு. ஆரோக்கியம் சீராகி வரும். விநாயகரை துதியுங்கள் நன்மைகள் நடக்கும்.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நினைத்ததெல்லாம் நடக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கூட வெற்றியை காண கூடிய அற்புதமான பலன்கள் உண்டு. பெண்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களை மனமுடைந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்கூடாக காண்பீர்கள். கூடுதல் உழைப்பு கொடுப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான பலன்கள் கிடைக்க இறை வழிபாடு செய்வது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுக்கிர வழிபாடு செய்ய சுபீட்சம் பெருகும்.

கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத நிறைய நல்ல விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த சில விஷயங்கள் இனிதே நடைபெறும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் எல்லாம் வசூல் ஆகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சக பணியாளர்களின் மூலம் அனுகூல பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் லாபம் ஏற்படும் யோகமுண்டு. பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கிய ரீதியான படிப்படியான முன்னேற்றம் மனதிற்கு புது தெம்பைக் கொடுக்கும். சனிக்கிழமைகளில் சனி வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் திடீரென ராஜ யோகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதுவரை சறுக்கி கொண்டிருந்த அனுகூலமற்ற விஷயங்களில் கூட அற்புதமான பலன்களை பெற இருக்கிறீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வளர்ச்சி சிறப்பாக அமையும். எனினும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய யுக்திகளை கையாள்வது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய பங்களிப்பும் மென்மேலும் பெருகும் இதனால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும் வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு வேலை பளு உடல் சோர்வை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். ராகு கால துர்க்கை பூஜை மேற்கொண்டு வர நன்மைகள் நடக்கும்.

- Advertisement -