ஜூன் மாத ராசி பலன் 2019 – 12 ராசியினருக்குமான துல்லிய கணிப்பு

june-month-rasi
- Advertisement -

மேஷம்:

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது.குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வெளிமாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:

Rishabam Rasi

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
Mithunam Rasi

மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் மாதமாக அமையும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம்.

கடகம்:
Kadagam Rasi

புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அரசாங்க விவகாரங்கள் சற்று இழுபறிக்குப் பின்னர் முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

- Advertisement -

சிம்மம்:

simmam

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும்.மாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம்.

கன்னி:

Kanni Rasi

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சராசரியான அளவிலேயே கிடைக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வயதுள்ள பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

துலாம்:

Thulam Rasi

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். மாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

Virichigam Rasi

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

தனுசு:

Dhanusu Rasi

பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மாதப் பிற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலை ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். மாணவ – மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும்.

மகரம்:

Magaram rasi

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாத முற்பகுதியில் தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களிலுள்ள கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.தி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கும்பம்:

Kumbam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மாணவ – மாணவியர் கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

மீனம்:

Meenam Rasi

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

வார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have June month Rasi palan 2019 in Tamil or June matha Rasi palangal in Tamil. This June month Rasi palangal covers Mesham to Meenam Rasi.

- Advertisement -