மந்திரக் கட்டு: காளி கட்டு மந்திரம்.

kaliamman-compressed

இந்த உலகில் நல்ல சக்திகள் இருக்கின்றது என்பதை நாம் எந்த அளவிற்கு நம்புகின்றோமோ, அந்த நல்ல சக்திகளுக்கு இணையாக கெட்ட சக்திகள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றது. வேலைச்சுமையும் காரணமாக இரவு 12 மணிக்கு கூட வீட்டிற்கு திரும்பும் சூழ்நிலையானது சிலருக்கு இருக்கின்றது. மனிதர்கள் வெளியில் செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள நடுச்சாமம் அது‌. அந்த சமயங்களிலெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் உலாவிக் கொண்டு இருக்கும் என்பதும் நம்பத்தகுந்த உண்மைதான். இதனால்தான் நம் முன்னோர்கள் நேரம் கெட்ட சமயங்களில் வெளியில் செல்லக்கூடாது என்று கூறுவார்கள்.

kaliamman

நம்மை பிடிக்காதவர்கள், நம்முடைய விரோதிகள், நம் மேல் பொறாமை கொண்டவர்கள், நம்மை அழிப்பதற்காக நம்மேல் ஏவிவிடும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் யாவும் நம்மை தாக்காமல் இருக்கவும், நம்மையறியாமலேயே நம்மை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கவும் நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.

இப்படி அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சுலபமான மந்திரம்தான் காளி கட்டு மந்திரம். உங்களை நீங்களே பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு செல்வதற்கான காளி கட்டு மந்திரம் இதோ..

kaliamman

“ஓம் பஹவதி! பைரவி!!
என்னை எதிர்த்து வந்த எதையும் கட்டு,
கடுகென பட்சியை கட்டு, மிருகத்தைகட்டு
ஓம், காளி ஓம், ருத்ரி ஓங்காரி, ஆங்காரி,
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு!
சத்ருவை கட்டு, எதிரியை கட்டு,
எங்கேயும் கட்டு!
சிங் வங் லங் லங்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம”
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”

- Advertisement -

MathuraKaliamman

இந்த மந்திரத்தை நாம் வெளிப்படையாக உச்சரிக்காமல் நம் ஆழ் மனதுக்குள் பத்து நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். தினந்தோறும் நீங்கள் இதனை தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றத்தினை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
பயணத் தடை, காரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kali kattu mantra in Tamil. Kali kattu manthiram in Tamil. Kali kattu slokas in Tamil. Kali kattu slogam in Tamil.