பயணத் தடை, காரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்

mantra chanting procedure tamil

நாம் தினம்தோறும் வீட்டைவிட்டு புறப்படும்போது, நாம் செய்யும் செயல்பாடுகள் வெற்றியில் முடிய வேண்டும் என்பதை நினைத்து கொண்டு தான் வீட்டிலிருந்து வெளியேறுவோம். ஆனால் சில சமயங்களில் நாம் மேற்கொள்ளப்படும் செயல்கள் வெற்றியில் முடியாது. ஏதாவது ஒரு தடங்கல் வந்து அதற்கு முட்டுக்கட்டை இட்டுவிடும். இந்த காலகட்டத்தில் சாதாரணமாக வெளியில் சென்றவர்கள் வீடு திரும்புவது என்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது. நாம் விதிமுறைகளை பின்பற்றி ஒழுங்காக சென்றாலும், அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக பல எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. இதிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது?

Home 1

நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நமக்கு பிரச்சனைகள் வராது என்று நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நமக்கு தினம்தோறும் ஏற்படக்கூடிய தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றியும் பெறவும் முடியும். எப்படி?

வீட்டிலிருந்து வெளியில் செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு ஏற்படும் எத்தனை பெரிய துன்பங்களிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த சுலபமான வழியை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.

காலமும் நேரமும் எப்பொழுதும் நமக்கு நன்மையைத் தான் தரும் என்பதை நம்மால் நிச்சயமாக கூறி விட முடியாது. ஆனால் அந்தக் காலத்தையும் நேரத்தையும் நமக்கு சாதகமாக மாற்றுவதற்கு அந்த இறைவனின் அருள் இருந்தால் மட்டும் போதும்.

அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அந்தாதி என்ற பாடலை நாம் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு படித்து வந்தாலே நம் பயணத்தில் ஏற்படும் தடைகளும் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் ஏற்படும் தடைகளும் நிச்சயம் நீங்கிவிடும். நாம் எதற்காக பயணத்தை மேற்கொள்கின்றோமோ அதில் வெற்றியை அடைந்து விட்டுதான், மீண்டும் வீட்டிற்கு திரும்புவோம். உங்களுக்கான வெற்றியைத் தேடித்தரும் பாடல் இதோ..

- Advertisement -

arunagirinadhar-swamigal

சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேர்ந்த வென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

தூரதேசப் பயணத்திற்கு முன்பும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது. நாம் எதற்காக பயணத்தைத் தொடங்குகின்றோமோ, அதற்கான வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் பாடல்தான் இது.

இதையும் படிக்கலாமே
வரலக்ஷ்சுமியின் அருளை முழுமையாக பெற வரலக்ஷ்மி விரத ஸ்தோத்திரம்

இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kariya vetri manthiram Tamil. Kariya vetri manthiram Tamil. Kariya vetri manthiram Tamil. Payana thadai yerpadamal irukka Tamil.