சூப்பரான காரக்கொழுக்கட்டை, சுவையாகவும் சாஃப்ட்டாகவும் இருக்க இப்படி செய்து பாருங்கள்.

kozhukattai
- Advertisement -

கொழுக்கட்டை என்றாலே அதில் பலவிதங்கள் உண்டு. அரிசிமாவு கொழுக்கட்டை, ஜவ்வரிசி கொழுக்கட்டை, உளுத்தம் மாவு கொழுக்கட்டை என்று பல வகைகள் உள்ளன. ஆனால் எப்பொழுதும் வீட்டில் உள்ள அரிசி மாவினை பயன்படுத்தி செய்யும் மிக எளிமையான காரக்கொழுக்கட்டையை எவ்வாறு சுவையாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிருதுவாகவும் செய்ய வேண்டும் என்பதனை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

kozhukattai

கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – இரண்டு டம்ளர், என்னை – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் – இரண்டு ஸ்பூன்.

- Advertisement -

முதலில் புழுங்கல் அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, நன்றாக கழுவி, வடிகட்டி அதனை ஒரு துணியில் பரப்பி 2 மணி நேரம் காய வைத்து விடவேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். புழுங்கல் அரிசியில் கொழுக்கட்டை செய்வதால் மிகவும் மிருதுவாக மற்றும் சாஃப்ட்டாக இருக்கும்.

arisimavu

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் அவற்றுடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதன்பின் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து அவை நன்றாக பொரிந்ததும் அவற்றுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும். இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பை சேர்த்து கொள்ளவேண்டும்.

- Advertisement -

ஒரு பெரிய பாத்திரத்தில், அரைத்து வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவில் இருந்து ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் தாளித்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும். இதனுடன் இவற்றிற்கு தேவையான அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

maavu

பிறகு நன்றாக கொதித்த சுடு தண்ணீர் 1 கப் அளவிற்கு இருக்குமாறு எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி கலந்துகொள்ளவேண்டும். சிறிது நேரம் சூடு ஆறும் வரை அப்படியே வைத்துவிடவேண்டும்

சற்று சூடு ஆறிய பின்னர் கையினால் மாவினை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிடித்து வைத்துள்ள உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

kozhukattai

இப்பொழுது சுடச்சுட காரக்கொழுக்கட்டை தயாராகிவிட்டது. இதனுடன் ஏதேனும் ஒரு சட்னி செய்து சாப்பிட கொடுத்தோம் என்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -