அட! இவ்வளவு கருப்பான கடாயை தேய்த்து சுத்தம் செய்ய ஸ்டீல் நார் கூட வேண்டாம்? வெறும் 5 ரூபாயில் இந்த கருகிப்போன கடாயை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக.

kadai-cleaning
- Advertisement -

நம்ம எல்லார் வீட்லயும் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த கருகிப்போன கடாய் இருக்கும். சமைத்து சமைத்து பழகிய அந்த கடையை, புதியதாக வாங்கும் போது இருந்த கடாய் போல சுத்தம் செய்வது என்பது மிக மிக கடினம். ரொம்பவும் மெலிந்து போன காடாயாக இருந்தால் அதை கடையில் கொடுத்து விட்டு புதியதாக மாற்றிக்கொள்ளலாம். காலம் காலமாக நாம் பயன்படுத்தி வந்த, கனமான சூப்பர் கடாயை கடையில் கொடுத்து மாற்றவும் மனசு வராது. அதை சுத்தம் செய்யவும் முடியாமல், அப்படியே பயன்படுத்தி வருவோம். இதற்கு ஒரு நல்ல தீர்வை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க நேரடியாக குறிப்பை பார்த்து விடலாம்.

உங்கள் கடாய் உள்ளே மூழ்கும் அளவிற்கு ஒரு பெரிய பாத்திரமாக பார்த்து அது நிரம்ப தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை அப்படியே அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்யவேண்டும். சூடான தண்ணீரில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் – 1 ஸ்பூன், சோடா உப்பு – 2 ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் – 2 ஸ்பூன், எலுமிச்சை பழ தோல் – 2 அல்லது 3 பொடியாக நறுக்கி அந்த சுடு தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் உங்கள் வீட்டில் இருக்கும் கறுத்துப்போன கடாயை போட்டு 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

கடாயின் அடிபாகம், உள்பாகம் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மூன்று மணி நேரம் இந்தக்கடாய் தண்ணீரில் ஊறிய பின்பு நாம் எடுக்கும் போது தண்ணீர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் கடாயை தேய்த்து சுத்தம் செய்ய நமக்கு வசதியாக இருக்கும். சரி இப்போது கடாய் நன்றாக சுடுதண்ணீரில் ஊறிவிட்டது.

kadai-cleaning1

அடுத்தபடியாக ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் ஹேர் பிக் – 1 ஸ்பூன், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் – 1/2 ஸ்பூன், தண்ணீர் – 1 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை கடாயில் அடிப்பகுதியில் மட்டும் லேசாக தடவி விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு இப்போது நாம் பயன்படுத்தப் போகும் ஒரு பொருள் உப்புக் காகிதம். எல்லா பேன்ஸி ஸ்டோர்களில் இந்த காகிதம் நமக்கு கிடைக்கும். அதுவும் 5 ரூபாய் விலையில் கிடைக்கும். அதை வாங்கி சிறிய துண்டாக வெட்டி தேவையான அளவு மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த உப்பு காகிதத்தை போட்டு கடையின் அடிப்பகுதியை முதலில் சுத்தமாக செய்தீர்கள் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு சுலபமாக நீக்கிவிடும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கே புரியும்.

தேவைப்பட்டால் ஹேர் பிக் கலவையை கலந்து வைத்துள்ளீர்கள் அல்லவா, அதை இலேசாக மீண்டும் எடுத்து அடி பக்கத்தில் தடவி தடவி, உப்பு காகிதத்தால் தேய்த்து கொடுக்க உங்களுடைய கடாய் சீக்கிரமே சுத்தமாக தொடங்கிவிடும். கடாயில் அடி பக்கத்தில் மட்டும் ஹேர்பிக் கலவையை பயன்படுத்த வேண்டாம். உள்பக்கத்தில் ஹார்பிக் போட்டு தேய்க்க வேண்டாம்.

பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி உப்பு காகிதத்தை போட்டு லேசாக தேய்த்து கொடுத்தாலே உள்ளே இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். உப்புக் காகிதம் வெறும் அட்டை என்பதால், அந்த காகிதத்தில் தேய்க்கும்போது நிறைய தண்ணீரை ஊற்றி தேய்த்துக் கொடுத்தால், உப்புக் காகிதம் நிறைய கிழிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதுசாக வாங்கிய ஹார்பிக் டாய்லெட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் அல்லவா. அதிலிருந்து முதலிலேயே கொஞ்சமாக பாத்திரம் தேய்க்க எடுத்துக்கொள்ளுங்கள். (எலுமிச்சை பழத்துக்கு பதிலாக வினிகர் பயன்படுத்திக் கொள்ளலாம். துணி துவைக்கும் லிக்விட் இருந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.) கருத்துப் போன கடாயை புதுசு போல மாற்ற இது ஒரு பெஸ்ட் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -