குலதெய்வத்தை எப்படி வணங்கினால் கடன் முழுவதும் தீரும் தெரியுமா ?

Kula deivam

இந்த காலத்தில் மனிதர்கள் பலரும் பெரும் துன்பம் அடைவது கடன் பிரச்சனையால் தான். பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் கூட கோடிகளில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாகி வாழ்வதை நாம் நாளிதழ்களில் படிக்கிறோம். இப்படி அனைத்து ரக மக்களையும் பாதிக்கிறது கடன் தொல்லை. இதில் இருந்து நம்மை விடுவிக்கும் சக்தி நமது குலதெய்வத்திடம் இருக்கிறது.

kula dheivam

முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம் அதில் ஒன்று தான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சனை விரைவில் தீர மூன்று பெளர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலிற்கு சென்று மனமுருகி குலதெய்வத்தை வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.

ஒரு சிலருக்கு குலதெய்வ கோவில் வெகு தொலைவில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் செல்ல இயலாத நிலை நிற்கும். அது போன்ற சமயங்களில் கீழே கூறப்பட்டுள்ள பரிகாரத்தை வீட்டிலே செய்யலாம்.

Karuppasamy

வீட்டிலே குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள் அந்த முன்பாக ஐந்துமுக விளக்கில் நெயிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கம் படி குலதெய்வத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிராத்தனை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பௌர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால் உங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள் குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:
ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் பல்வேறு குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we dicussed how we need to worship kula deivam to resolve our loan problem. It can also be called as Kula deiva valipadu murai or kula deivam valipadu seivathu eppadi in Tamil.