ஒரே நாளில் உங்களது முகத்தை பாலை விட வெள்ளையாக மாற்றிவிட முடியும். கடலை மாவோடு இந்த 1 பொருளை மட்டும் சேர்த்து முகத்தில் போட்டு தான் பாருங்களேன்!

pack
- Advertisement -

ஒரு சிலரின் முகம் பார்க்கும் போதே பாலைப் போல வெள்ளையாக அழகாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வெள்ளையாக இருப்பதோடு சேர்த்து, சிலபேருக்கு ஜொலி ஜொலிக்கும் சருமம் இருக்கும். கொஞ்சம் மின் விளக்குகளின் வெளிச்சம் சில பேருடைய முகத்தில் பட்ட உடன், அவர்களுடைய முகம் தானாக மின்னத் தொடங்கிவிடும். அதை பார்க்கும்போது நம்முடைய முகமும் அதேபோல் பளபளவென ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும். அதற்காக அதிகப்படியான காசை கொடுத்து நம்மால் பியூட்டி பார்லருக்கு சென்று நம்முடைய அழகை மேம்படுத்திக் கொள்ளவும் முடியாது. சில பேருக்கு நிதிப் பற்றாக்குறை. நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய முகத்தை வெள்ளையாக அழகாக பளபளப்பாக மாற்ற என்ன செய்யலாம். தெரிந்துகொள்வோம் வாருங்கள்!.

face1

பாலைப் போல உங்களுடைய முகமும் வெள்ளையாக மாற வேண்டுமென்றால் பாலில் இருந்து நாம் ஒரு பொருளை எடுத்து தான் நம்முடைய முகத்தில் போட வேண்டும். தினமும் பாலைக் காய்ச்சும்போது அதன் மேல் ஆடை கட்டி வரும். பாலாடை, பால் ஏடு என்றும் சொல்வார்கள். தினம்தோறும் பாலைக் காய்ச்சும்போது அந்த ஆடையை பாலில் இருந்து எடுத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேகரித்து பிரிட்ஜில் வைத்து வாருங்கள்.

- Advertisement -

கொஞ்சம் நிறைய பால் ஆடை சேர்ந்தவுடன், அந்த பால் ஆடையை  சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்துக் கொண்டால், பாலாடை கிரீம் போல மாறிவிடும். உங்கள் வீட்டில் பிளண்டர் இருந்தாலும் அதை வைத்து பாலாடையை நன்றாக அடித்து கிரீம் போல தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். பாலாடையில் இருந்து எடுக்கப்பட்ட அந்த க்ரீமை அப்படியே ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். 15 நாட்களுக்கு கூட கெட்டுப் போகாமல் இருக்கும். அது அப்படியே இருக்கும்.

milk

ஒரு சிறிய பவுளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு கடலைமாவு போட்டுக் கொள்ள வேண்டும். ஃப்ரிட்ஜில் பாலாடையில் க்ரீம் தயார் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா? அந்தர் கிரீமில் இருந்து 2 ஸ்பூன் எடுத்து கடலை மாவில் போட்டு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை நன்றாக அடித்து கலந்து கொள்ளுங்கள். இப்போது நமக்கு முகத்தில் போடுவதற்கு ஃபேஸ் பேக் தயாராக கிடைத்திருக்கும்.

- Advertisement -

நீங்கள் தயார் செய்த இந்த பேக்கை உங்கள் முகம் முழுவதும் போட்டுக் கொள்ள வேண்டும். கழுத்து பகுதிகளில் போட மறக்காதீர்கள். இந்த ஃபேஸ் பேக் 20 நிமிடங்கள் அப்படியே உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். சிலருக்கு கடலை மாவு முகத்திற்கு ஒத்துவராது என்றால் பயத்த மாவு அல்லது பச்சை பயிறு மாவில் இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்தும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

face9

சிலபேருக்கு பாலாடையை முகத்தில் போட்டால் முகப்பரு வரும் என்ற சந்தேகம் இருக்கும். ஆனால், அந்த பால் ஆடையை நன்றாக அரைத்து, பின்பு அதில் ஏதாவது ஒரு மாவை கலந்து முகத்தில் போட்டால் முகப்பரு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் எல்லோருமே இந்த குறிப்பை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்ட உடனேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -