கணக்கே இல்லாமல் முடி கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த கடலை மாவு போதும். கருகருன்னு முடி அழகாக வளரும்.

hair13
- Advertisement -

தலையை சுத்தம் செய்ய பெரும்பாலும் நாம் எல்லோரும் ஷாம்பு அல்லது சீயக்காய் தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் கடையில் வாங்க கூடிய இந்த இரண்டு பொருட்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு சில நாட்கள் இந்த கடலை மாவை தலைக்கு போட்டு தேய்த்து குளித்து பாருங்கள். தலை முடி உதிர்வதில் தலைமுடி வளர்வதில் நல்ல வித்தியாசம் தெரியும். கடலை மாவை சருமத்திற்கு தானே பயன்படுத்துவோம். முடிக்கு கூட பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். தலையை பிளீச் செய்வதற்கு கடலை மாவு நல்ல ஒரு பொடியாக சொல்லப்பட்டுள்ளது. கடலை மாவை எப்படி தலையை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம் என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த தலை குளியல் குளியல் பொடி தயாரிக்க கடலை மாவு – 1/4 கப், வெந்தய பொடி – 2 ஸ்பூன், செம்பருத்தி இலை பொடி – 2 ஸ்பூன் தேவைப்படும். உங்களுடைய தலையில் பேன் பொடுகு அரிப்பு தொல்லை இருந்தால் செம்பருத்தி இலை பொடிக்கு பதிலாக வேப்ப இலை பொடியை கூட நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நாம் இந்த குறிப்பில் பயன்படுத்தியிருக்கும் இந்த மூன்று பொருட்களுமே பொடியாக நமக்கு கிடைக்கின்றது. இல்லை உங்களுக்கு பொடி வாங்குவதில் விருப்பம் இல்லை என்றால், எல்லா பொருட்களையும் நீங்களே வாங்கி வெயிலில் காய வைத்து அரைத்து கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

இப்படி மேலே சொன்ன அளவுகளில் மூன்று பொடியையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான அளவு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த தலை குளியல் பொடியை எடுத்து போட்டு, இதில் அரிசி வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி பேஸ்டாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரிசி வடித்த கஞ்சி, அரிசி தண்ணீர் இரண்டுமே உங்களுடைய வீட்டில் இல்லை என்றால் நல்ல தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளலாம். ஒரு மணி நேரம் இந்த தலை குளியல் பொடி அப்படியே தண்ணீரில் கலந்த பின்பு ஊற வேண்டும். அப்போது தான் இது சீயக்காய் பேஸ்ட் போல நமக்கு கிடைக்கும்.

இந்த பேஸ்டை சீயக்காய் போட்டு தலைக்கு குளிப்பது போலவே நன்றாக தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். இந்த பொடியை போட்டால் தலையில் இருக்கும் எண்ணெய் பசை நீங்குமா. சாதாரணமாக இருக்கும் எண்ணெய் பசை அழுக்கு இரண்டுமே நீங்கிவிடும்.

ரொம்பவும் உங்களுடைய தலையில் அழுக்கு எண்ணெய் பசை இருந்தால் இரண்டு முறை இதை தலைக்கு போட்டு தேய்த்துக் குளியுங்கள். ஷாம்பு போட்டு குளித்ததை விட பெஸ்ட் ரிசல்ட் நிச்சயமாக கிடைக்கும். மூன்று மாதம் ஷாம்புவை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த பொடியை முயற்சி செய்துதான் பார்ப்போமே. முடி வளர்ச்சியில் என்ன வித்தியாசம் தெரிகிறது என்று. பிறகு உங்களுக்கு பிடித்திருந்தால் இதையே கண்டினியூ பண்ணிக்கோங்க.

- Advertisement -