1 கப் கடலை மாவு இருந்தால் போதும், இந்த வெயில் காலத்திலும் உங்கள் முகம் வெண்மையாக ஜொலிக்கும்.

kadalai maavu face pack
- Advertisement -

கடலை மாவு அழகு குறிப்புகள்

நம் அன்றாட உணவு பொருட்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு பருப்பு வகையாக கடலை பருப்பு இருக்கின்றது. இந்த கடலை பருப்பை அரைத்தால், நமக்கு கடலை மாவு கிடைக்கிறது. கடலை மாவையும் பல வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தினாலும், முக அழகு கலையிலும் கடலை மாவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடலை மாவு பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடலை மாவு பேஸ் பேக்

சில பெண்களின் முகத்தில், முகப்பருக்கள் அதிகம் ஏற்பட்டு அவர்களின் முகத்தோற்றத்தை கெடுப்பதோடு, சரும ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும். முகப்பருக்களை போக்கும் ஆற்றல் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் ஆகிய இரண்டுக்கும் உள்ளது. எனவே ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு கடலை மாவு போட்டு, அதனுடன் தேவையான அளவு மஞ்சள் பொடி போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதமான நீரில் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் தயாரித்த பேஸ் பேக்கை முகம் முழுவதும் நன்கு தடவிக்கொள்ள வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த பேஸ் பேக்கை முகத்திலே காயை விட்டு, பிறகு இதமான நீரைக் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ் பேக்கை பெண்கள் பயன்படுத்துவதால் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே முகத்தில் உள்ள முகப்பருக்களின் தழும்புகளையும் மறையச் செய்யும்.

தோல் கருமை நீங்க

பொதுவாகவே வெயிலில் வாகனம் ஒட்டி செல்லும் பெண்கள், நடந்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முகம், கழுத்து மற்றும் கைப்பகுதிகளின் தோல்கள் கருத்துப் போய்விடும். கருத்த இந்த தோல் பகுதிகள் மீண்டும் அதன் இயல்பான நிறத்தை பெற கடலை மாவு உதவுகிறது. இதற்க்கு ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு பப்பாளி பழ மசியலை சேர்த்து, சிறிது ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து ஒரு பேஸ்ட் பாதத்தில் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு முகம், கழுத்து, கைகளின் மேற்புறம் முழுவதும் இந்த பேஸ்டை நன்கு தடவி, ஒரு 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படி மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் சூரிய வெப்பத்தால் கருத்த தோல் பகுதிகள் மீண்டும் இயல்பான நிறத்தை பெறும்.

முகத்தில் எண்ணெய் வடிதல் நீங்க

எண்ணெய் வழியும் சருமம் கொண்ட பெண்களுக்கு, முகத்திலும் அதிகளவு எண்ணெய் வழிந்து, அவர்களின் முக அழகை கெடுத்து விடும். இப்படி முகத்தில் எண்ணெய் வடியும் தன்மை கொண்ட பெண்கள், ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கடலை மாவு சேர்த்து, அதனுடன் குறைந்த அளவில் ரோஸ் வாட்டர் சேர்த்து, இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பேஸ் பேக்கை முகம் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு, அதன் பிறகு முகத்தை இதமான நீரால் கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வடிதல் பிரச்சனை நீங்கி, முகம் அழகான தோற்றத்தை பெறும். ரோஸ் வாட்டர் முகத்தில் இருக்கின்ற சருமத்தின் நுண்ணிய துவாரங்களில் எண்ணெய் சேராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -