என்ன! பாத வெடிப்பு சரியாக ஒரே ஒரு தக்காளி மட்டும் இருந்தா போதும்மா? ஆமாங்க வெடிப்பு வந்து பிளவு பட்ட பாதம் கூட பட்டு போல மாற பைசா செலவில்லாத சூப்பர் டிப்ஸ்.

foot cract
- Advertisement -

முன்பெல்லாம் பாத வெடிப்பு குறிப்பிட்ட வயதை கடந்தவர்களுக்கு மட்டும் தான் வரும். ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் சிறு பிள்ளைகளுக்கு கூட இந்த பாத வெடிப்பு வந்து விடுகிறது. இதற்கு முக்கியமான காரணம் பாதங்களை நாம் சுத்தமாக பராமரித்து கொள்ளாதது மட்டுமே. சில நேரங்களில் பித்தம் அதிகமானாலும் இந்த பிரச்சனை வரும். இப்படி எந்த காரணத்தினால் பாத வெடிப்பு வந்து இருந்தாலும் இந்த முறையில் சுலபமாக அதை சரி செய்து விடலாம். வாங்க பாத வெடிப்பை எப்படி சுலபமாக சரி செய்வது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலேயே பாத வெடிப்பை சரி செய்யும் முறை
இதற்கு முதலில் உங்கள் பாதங்கள் மூழ்கும் படியான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கொஞ்சமாக கல் உப்பை சேர்த்து அதில் பாதத்தை பத்து நிமிடம் வைத்து விடுங்கள். இதனால் பாதம் நன்றாக ஊறி நாம் சுத்தம் செய்யும் போது அழுக்கு இறந்த செல்கள் எல்லாம் வெளியில் வர உதவியாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து ஒரு தக்காளியை எடுத்து அதை இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாதி தக்காளி பழத்தில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை மேலாக தூவி வைத்து விடுங்கள். இத்துடன் ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக கடலை மாவை எடுத்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல குழைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து பாதத்தை தண்ணீரில் இருந்து எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு முதலில் பாதி தக்காளியை நன்றாக பாதம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதை ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் பிறகு நல்ல சுத்தமான காட்டன் துணி வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். இப்போது மீதி இருக்கும் பாதி தக்காளியில் சர்க்கரை சேர்த்து வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த பழத்தை எடுத்து மறுபடியும் உங்கள் பாதத்தை கிளாக் வைஸ், ஆண்டி கிளாக் வைஸ் என மாற்றி மாற்றி தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு எடுத்து வைத்திருக்கும் கடலை மாவில் இந்த தக்காளியை தொட்டு பாதத்தின் மேலே தேய்த்து கொள்ளுங்கள். இது அப்படியே ஒரு பத்து நிமிடம் வரை உங்கள் பாதத்தில் இருக்கட்டும். மறுபடியும் இதே தக்காளியை வைத்து இன்னொரு முறை நன்றாக பாதத்தை சுத்தம் செய்த பிறகு மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடம் பாதத்தை வைத்து எடுத்து விடுங்கள்.அதன் பிறகு துணி வைத்து துடைத்த பிறகு தேங்காய் எண்ணெய் தேய்த்து பாதத்தை லேசாக மசாஜ் செய்து கொடுங்கள்.

இதை முடிந்த வரையில் இரவு உறங்கும் போது செய்வது நல்லது. ஏனென்றால் இப்படி பாதத்தை சுத்தம் செய்யும் போது இறந்த செல்கள், அழுக்குகள் அனைத்தும் வெளியேறி இருக்கும். இந்த நேரத்தில் பாதத்தில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் வெடிப்புகளும் சீக்கிரம் சரியாகும். அதற்கு பாதம் ஓய்வில் இருப்பது மிகவும் அவசியம்.

- Advertisement -

ஒரு சிலருக்கு நக இடுக்கில் எல்லாம் அழுக்கு சேர்ந்து நகத்தைச் சுற்றி வீக்கமாக இருக்கும் அல்லது வலி எடுக்கும். அப்படியானவர்கள் இந்த முறையில் சுத்தம் செய்யும் போது விரல்களில் மேல் கொஞ்சமாக பேஸ்ட்டை வைத்து நம் குளிக்க பயன்படுத்தும் நாரை வைத்து தேய்த்து விட்டால் போதும். விரல் இடுக்கு நக கண்களில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறி வீக்கம் வலி அனைத்தும் குறைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்து ரூபாய்க்கு நெல்லிக்காய் வாங்கி இப்படி பயன்படுத்தி பாருங்க. ஒரு முடி கூட உதிராமல் நல்ல கரு கருவென்று நீண்டு வளரும். அப்புறம் இனி முடி உதிர்வு பிரச்சனைக்கு குட்பை சொல்ல வேண்டியது தானே.

பாத வெடிப்பு சரியாக பயன்படுத்தும் இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால், நீங்களும் ஒரு முறை இதை முயற்சி செய்து பாருங்கள். இதை தொடர்ந்து செய்து வரும் போது நிச்சயம் பாத வெடிப்பு எல்லாம் நீங்கி பாதம் நல்ல அழகை பெறும்.

- Advertisement -