கடலைப்பருப்பு இருந்தா ரொம்பவே வித்தியாசமான சுவையில் சிம்பிளான இந்த சட்னியை செஞ்சு பாருங்க. இந்த சட்னிக்கு சுடச் சுட இட்லி இருந்தா போதும் கணக்கில்லாமல் உள்ள போயிட்டே இருக்கும்.

- Advertisement -

இந்த சட்னி வகைகளை எடுத்துக் கொண்டால் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் இன்று இந்த சமையல் குறிப்பு பதிவில் கடலைப் பருப்பை வைத்து ரொம்பவே சுவையாகவும் அதே நேரத்தில் சீக்கிரத்தில் செய்யக் கூடிய ஒரு அருமையான சட்னியை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு – அரை கப், தேங்காய் துருவியது – கால் கப், காய்ந்த மிளகாய்- 7, பூண்டு பல் – 10, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு -1 ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கடலைப்பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விட்டு தேங்காய், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கொஞ்சம் கருவேப்பிலை என இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு தட்டில் கொட்டி ஆறஸவிட வேண்டும். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்த பின்பு அரை ஸ்பூன் உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து இதை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்த பிறகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது தாளிப்பை சட்னியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அடடா! பார்க்கும்போதே நாக்கு ஊறுதே. வெறும் 10 நிமிடத்தில் மணக்க மணக்க சூப்பரான முட்டை சுக்கா செய்வது எப்படி? சுட சுட சாதம் சப்பாத்திக்கு செம்ம சைடிஷ்ங்க இது.

இந்த சட்னி அதிக கெட்டியாகவோ தண்ணியாகவோ இல்லாமல் இருக்கும் படி இருந்தால் நன்றாக இருக்கும். இந்த சட்னி செய்வது மிக மிக சுலபம் அதே நேரத்தில் சுவை பிரமாதமாக இருக்கும். சுட சுட இட்லியுடன் இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இது தோசை, பொங்கல், உப்புமா என அனைத்து டிபன் வகைகளுக்குமே சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். இந்த சிம்பிள் சட்னி ரெசிபி நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -