கடலைப்பருப்பு காரச்சட்னி ருசியாக செய்வது எப்படி? இப்படி செய்து கொடுத்தால் எத்தனை இட்லி இருந்தாலும் பத்தாது.

kadalai-paruppu-chutney1
- Advertisement -

தினமும் ஒரே வகையான சட்னி வகைகள் சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு இந்தச் சட்னி புது வகையாக இருக்கும். அட்டகாசமான சுவையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கடலைபருப்பு சட்னி இப்படி ஒரு முறை செய்து பார்த்து குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரின் பாராட்டிற்கும் சொந்தக்காரர் ஆகி விடுங்கள். கடலைப்பருப்பு சட்னி மிகவும் வித்தியாசமான சுவையில் நன்றாக இருக்கும். இதற்கு அதிக பொருட்களும் ஒன்றும் தேவைப்பட போவது இல்லை. சுவை மிகுந்த கடலைப்பருப்பு காரச் சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

kadalai-paruppu-chutney

கடலைப் பருப்பு காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய்த் துருவல் – 1 கப்.

- Advertisement -

தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்.

kadalai-paruppu

கடலைப் பருப்பு காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து வைத்துள்ள கடலை பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலை பருப்பு கருகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பு கருகி விட்டால் சட்னி சுவையாக இருக்காது. நிறமும் தராது. லேசாக நிறம் மாறும் பொழுது சட்டென எடுத்து விடுங்கள்.

- Advertisement -

பின்னர் வரமிளகாய்களைப் போட்டு இதே போல் லேசாக வறுத்து எடுக்கவும். மிளகாய் கருகினாலும் சுவை நன்றாக இருக்காது. அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு புளி சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும். இந்த மூன்று பொருட்களும் தனித் தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள்.

kadalai-paruppu-chutney2

பின்னர் அதிலிருந்து கடலைப்பருப்பு மற்றும் வரமிளகாயை மட்டும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தனியாக மிக்ஸி ஜாரில் போட்டு நறநறவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதிலேயே தேங்காய்த் துருவல் மற்றும் வதக்கிய புளியை பிய்த்து போட்டு லேசாக தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கெட்டியாக விரும்புபவர்கள் அதிகம் தண்ணீர் ஊற்ற தேவை இல்லை.

- Advertisement -

kadalai-paruppu-chutney3

பின்னர் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை முறையே தாளித்தம் செய்து சட்னியுடன் சேர்க்க வேண்டும். அவ்ளோதாங்க! அருமையான, பிரமாதமான சுவையுடன் கூடிய கடலைப் பருப்பு கார சட்னி தயார். உங்களுக்கு காரம் அதிகம் வேண்டாம் என்று நினைத்தால் வரமிளகாய்களை குறைத்துக் கொள்ளலாம். எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி என்று சதா செய்து செய்து அலுத்துப் போனவர்கள் இந்த சட்னியை ஒரு முறை முயற்சி செய்தால் இதன் அபாரமான சுவையை நீங்களும் ருசிக்கலாம்.

இதையும் படிக்கலாமே
பச்சரிசியில் இட்லி செய்ய முடியுமா? அதற்கான அளவுகள் என்ன? நன்மைகள் என்னென்ன?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -