பச்சரிசியில் இட்லி செய்ய முடியுமா? அதற்கான அளவுகள் என்ன? நன்மைகள் என்னென்ன?

idly-pacharisi

வழக்கமாக எல்லோரது வீட்டிலும் இட்லிக்கு புழுங்கல் அரிசி தான் உபயோகிப்போம். ஆனால் பச்சரிசியை மட்டும் உபயோகித்து இட்லி செய்ய இயலுமா? அப்படி செய்ய முடியும் என்றால், அதற்கான அளவுகள் தான் என்ன? புழுங்கல் அரிசியை காட்டிலும் பச்சரிசி மிகவும் நல்லது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பச்சரிசியில் இட்லி, தோசை சுட்டுக் கொடுத்தால் அதிக புஷ்டியுடன் ஆரோக்கியமாக வளர்வார்கள். வெறும் பச்சரிசியை மட்டும் வைத்து இட்லி மாவு எப்படி அரைப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

pacharisi

முந்தைய காலங்களில் எல்லாம் பண்டிகை, விசேஷம் போன்ற விழாக்களில் புழுங்கல் அரிசியில் செய்த பலகாரத்தை சாப்பிட மாட்டார்கள். இட்லி, தோசை போன்றவை கூட புழுங்கல் அரிசியில் அன்றைய நாட்களில் செய்ய மாட்டார்கள். அதற்காகவே தனியாக பண்டிகை, விழாக்களின் பொழுது மட்டும் பச்சரிசியை உபயோகிப்பார்கள்.

பச்சரிசியில் நீங்கள் மாவு அரைக்கும் பொழுது இட்லி மிகவும் மெத்தென்று சூப்பராக வரும். ஒரு முறை நீங்களும் இந்த அளவில் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக ஊற வைத்து அரைத்து பாருங்கள். அதன் பிறகு புழுங்கலரிசியை உபயோகிப்பதை தவிர்த்து விடுவீர்கள். பொதுவாக நான்கு ஆழாக்கு புழுங்கல் அரிசிக்கு, ஒரு ஆழாக்கு உளுந்து போட போடுவது வழக்கம். ஆனால் இப்போது நாம் பச்சரிசி உபயோகிக்க இருப்பதால், ஒரு ஆழாக்கு பச்சரிசிக்கு இரண்டு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிறது.

pacharisi1

பச்சரிசியை நன்கு கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கி பச்சரிசியில் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அதே போல் உளுந்தையும் நன்றாகக் கழுவிக் கொண்டு அதில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த தண்ணீரை மட்டுமே மாவு அரைக்க உபயோகப்படுத்த வேண்டும். புதிதாக வேறு தண்ணீர் எடுக்கக் கூடாது.

- Advertisement -

முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஊற வைத்த தண்ணீரை ஊற்றிக் கொண்டே நுரைக்க நுரைக்க பொங்கி வர வேண்டிய அளவிற்கு ஆட்டி ஆட்டி எடுக்க வேண்டும். அதே போல் பச்சரிசியை தனியாக கொர கொரப்பாக ஊற வைத்த தண்ணீரை தெளித்து அரைக்க வேண்டும்.

idli-mavu

இரண்டுமே அரைத்து முடித்ததும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து விட வேண்டும். மாலையில் அரைத்து வைத்து விட்டால் மறுநாள் காலையில் இட்லி ஊற்றலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைப்பது மிகவும் நல்லது. நன்கு பெரிய பெரிய தட்டுகளாக இட்லி ஊற்றி வைத்தால், சுமார் 25 நிமிடங்கள் வரை வெந்து வருவதற்கு நேரம் எடுக்கும். இந்த முறையில் நீங்கள் அரைக்கும் போது கிரைண்டரில் தான் அரைக்க வேண்டும் என்பதில்லை. மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். மிக்ஸியில் அரைத்தால் மிகவும் மெத்தென்று பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

Idli

பச்சரிசியில் செய்த இட்லியை பண்டைய காலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு படையலாக வைப்பார்கள். தெய்வங்களுக்கு பச்சரிசியில் உபயோகித்த நைவேத்தியங்களை படைப்பது மிகவும் நல்ல பலன்களை நமக்கு தரும். ஒரு சிலருக்கு பச்சரிசி ஒத்துக் கொள்ளாது. வயிற்று பிரச்சனைகள் உருவாகும். அது போன்றவர்கள் பச்சரிசியை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் தாராளமாக பச்சரிசியில் இட்லி மாவு அரைத்து சுவையான பச்சரிசியில் செய்த இட்லியை சுவைத்து மகிழலாம்.

இதையும் படிக்கலாமே
இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் இருக்க இப்படித் தான் மாவு அரைக்க வேண்டும்! தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.