இந்த பருப்பை வச்சு கூட பாயாசம் செய்யலாமா? இதுவரைக்கும் தெரியாம போச்சே என்று யோசித்து இனிமேல் இந்த பாயாசம் தான் அடிக்கடி நம்ம வீட்ல இருக்கும் என்று நீங்களே நினைக்கிற அளவுக்கு ருசியில பிரமாதமா இருக்கும்.

kadalai paruppu payasam
- Advertisement -

நல்ல நாள், பெரிய நாள் என்று வரும்பொழுது நாம் அனைவரும் நம் வீட்டில் ஏதாவது ஒரு இனிப்புடன் கூடிய சமையலை செய்வோம். பண்டைய காலம் முதல் இன்று வரை விருந்து சாப்பாடு என்றாலே அனைவரும் வடை பாயாசத்துடன் விருந்தா என்று தான் கேட்பார்கள். அப்படி நம்முடைய பாரம்பரிய உணவில் பாயாசம் என்பது கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட பாயாசத்தை வித்தியாசமான ஒரு பருப்பை வைத்து எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பாயாசம் என்று சொன்னால் அதில் பல வகைகள் இருக்கின்றன. ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயாசம், அவல் பாயாசம், பால் பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், சில நேரங்களில் சில காய்கறிகளை வைத்து கூட பாயாசம் என்பது செய்வதுண்டு. அந்த வகையில் தான் இன்று நாம் கடலைப்பருப்பை வைத்து எப்படி சுலபமான முறையில் பாயாசம் செய்யலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால் கப் அளவு கடலைப்பருப்பை போட வேண்டும். அதனுடன் இரண்டு ஸ்பூன் ஜவ்வரிசியை போட்டு அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கால் கப் அளவு வெல்லத்தை சேர்த்து வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு விசில் போன பிறகு பருப்பில் இருக்கும் நீரை தனியாக எடுத்துவிட்டு பருப்பை மெத்தை கொண்டு நன்றாக கடைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு நெய் ஊற்ற வேண்டும். அதில் 15 முந்திரி, 15 உலர் திராட்சை, பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம் 5, பொடியாக நறுக்கிய பாதாம் 10, இவைகளை நெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேல் சொன்ன அனைத்தும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மீதம் இருக்கும் நெய்யில் துருவிய தேங்காய் அரை கப்பை சேர்த்து நன்றாக வதக்கி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது அதே கடாயில் நாம் மசித்து வைத்திருக்கும் கடலைப்பருப்பை சேர்த்து அதனுடன் வேகவைத்த தண்ணீரையும் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்த பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்ல கரைசலை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக குதித்த பிறகு அதில் கால் ஸ்பூன் அளவு ஏலக்காய் தூள், கால் ஸ்பூன் அளவு சுக்குத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஏலக்காய் மற்றும் சுக்கின் வாசம் நன்றாக வந்த பிறகு, நாம் வறுத்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் அதனுடன் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான அருமையான கடலைப்பருப்பு பாயாசம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஓணம் ஸ்பெஷல்! கேரளத்து வெள்ளரிக்காய் கிச்சடி செய்வது எப்படி? 10 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ரெசிபியை நாமும் ட்ரை பண்ணி பார்ப்போமா?

எப்போதும் செய்வது போல் பாயாசம் செய்யாமல் புதிதாக வித்தியாசமாக நம் வீட்டில் இருக்கக்கூடிய கடலைப் பருப்பை வைத்து பாயாசம் செய்து அனைவரின் பாராட்டையும் பெறலாம்.

- Advertisement -