ஓணம் ஸ்பெஷல்! கேரளத்து வெள்ளரிக்காய் கிச்சடி செய்வது எப்படி? 10 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ரெசிபியை நாமும் ட்ரை பண்ணி பார்ப்போமா?

kichadi
- Advertisement -

இன்றைக்கு கேரளத்து ஓணம் பண்டிகை. கேரளத்து விருந்தில் கட்டாயமாக இந்த வெள்ளரிக்காய் கிச்சடி இருக்கும். இது ஒரு கேரளத்து ரெசிப்பி தான். ஆனால் வெள்ளரிக்காயை வைத்து மிக மிக சுலபமாக நம்முடைய வீட்டிலும் இதை செய்யலாம். ருசியாக தான் இருக்கும். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிப்பியும் கூட. இன்று ஓணம் விருந்தில் இருக்கக்கூடிய அத்தனை ரெசிபி யையும் நம்மால் செய்ய முடியாது என்றாலும், இந்த ஒரு ரெசிபியை நம்முடைய வீட்டில் செய்து நாமும் கேரளத்து சகோதரர சகோதரிகளுடன் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

செய்முறை

இதற்கு நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் வெள்ளரிக்காய். அந்த வெள்ளரிக்காயை வாங்கி தோல் சீவி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கி சுத்தம் செய்த வெள்ளரிக்காய் 250 கிராம் தேவை. அடுப்பில் ஒரு கடாயை வைத்து நறுக்கிய வெள்ளரி காய்களை போட்டு, தேவையான அளவு உப்பு, போட்டு 1/4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வெள்ளரிக்காயை ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

- Advertisement -

வெள்ளரிக்காய் வேகட்டும். இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து தேங்காய் துருவல் 1 கப், அளவோடு புளித்த தயிர் 1/2 கப், பச்சை மிளகாய் 3 லிருந்து 4 காரத்திற்கு ஏற்ப, இந்த மூன்று பொருட்களையும் போட்டு நைசாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதற்குள் கடாயில் வெள்ளரிக்காய் நன்றாக வெந்திருக்கும். மூடியை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை எல்லாம் சுத்தமாக சுண்ட வைத்து விடுங்கள்.

அதற்கு பிறகு தான் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை, கடாயில் வெந்த வெள்ளரிக்காயில் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பு கட்டாயம் சிம்மில் தான் இருக்க வேண்டும். அதிக தீயில் அரைத்த தேங்காய் தயிர் விழுதை ஊற்றினால் தேங்காய் திரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தேங்காய் விழுதை ஊற்றியவுடன் இன்னொரு 1/2 கப் அளவு தயிர் இதோடு சேர்த்து கலந்து விடுங்கள். 1/4 ஸ்பூன் கடுகை ஒரு சின்ன உடலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக நசுக்கி இந்த கிச்சடியில் சேர்க்க வேண்டும். இடித்த கடுகு இதற்கு ஒரு தனி ருசியை கொடுக்கும். இதை யாரும் ஸ்கிப் பண்ணாதீங்க. இதுதான் இந்த டிஷின் ஸ்பெஷல்.

கடாயில் நாம் சேர்த்திருக்கும் பொருட்களை எல்லாம் கைவிடாமல் ஒரு கரண்டியை வைத்து கலந்து கொண்டே இருங்கள். இந்த கிச்சடி நன்றாக சூடாகி கொதி வரும்போது, ஒரு ஆவி வரும்போது, உடனடியாக அடுப்பை அணைத்து விட வேண்டும். ரொம்பவும் கொதி வந்தால் இந்த கிச்சடியின் சுவை மாறிவிடும். (தேங்காய் விழுதை ஊற்றியவுடன், 1/2 கப் அளவு தயிர் கூடுதலாக ஊற்றும் போது உப்பு சரிபார்த்து போட்டுக் கொள்ளவும்.)

இதையும் படிக்கலாமே: பருப்பே சேர்க்கமா பத்து நிமிஷத்துல கமகமன்னு வீடு மணக்குற அளவுக்கு காய் சாம்பார் செய்யனும்ன்னா இந்த சீக்ரெட் மசாலாவை அரைச்சு சாம்பார் வைச்சிடுங்க.

சூடான இந்த கிச்சடியை உடனடியாக வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள். இல்லை என்றால் அந்த பாத்திரத்தின் சூட்டிலேயே கிச்சடி திரிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போது கிச்சடி தயார். இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்கணும். 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், கடுகு, வரமிளகாய் 4(சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளியது), கருவேப்பிலை, போட்டு தாளித்து கிச்சடியில் கொட்டி அப்படியே 5 நிமிடம் மூடிவிடுங்கள். பிறகு மூடியை திறந்து கலந்து பரிமாறினால் சூப்பரான சுவையில் கிச்சடி தயார்.

- Advertisement -