கடமை அறிவோம் – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
– மகாகவி பாரதியார்

மனிதன் செய்யவேண்டிய கடமையின் முக்கியத்துவம் குறித்து பாரதியார் இந்த கவிதையில் தெளிவாக கூறியுள்ளார். கட்டிக்கொண்டு வா என்றால் வெட்டிக்கொண்டு வரவேண்டும் என்ற நம் முன்னோர்களின் பழமொழியையும் இதில் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்கலாமே:
சென்றது மீளாது – பாரதியார் கவிதை

English Overview:
Here we have Bharathiyar kavithaigal – Kadamai Arivom.”Kadamai purivaar inpuruvaar lyrics in Tamil” is the first line of this Bharathiyar Padal.