சென்றது மீளாது – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

ஒரு விடயம் முடிந்துவிட்டால் அது மீண்டும் கிடைப்பது கடினம் ஆகையால் முடிந்ததையே எப்போதும் நினைத்துக்கொண்டிருந்து கவலை என்னும் குழியில் விழவேண்டாம். இன்று தான் நாம் புதிதாய் பிறந்தோம் என்று நினைந்திக்கொண்டு, நல்ல எண்ணங்களை நமக்குள் புதிதாய் விதைத்து வாழவேண்டும். அப்படி செய்கையில் நம் தீமைகள் அனைத்தும் அழிந்து போகும் என்கினார் பாரதியார்.

இதையும் படிக்கலாமே:
புதுமைப் பெண் – பாரதியார் கவிதை

English Overview:
Here we have Bharathiyar kavithai – Sentrathu Meelaathu. The first line of the Bharathiyar Padal is “Sentrathini meelaathu moodare”.