தலைமுறை தலைமுறையாக அடைக்க முடியாமல் இருக்கும் கடனை கூட, அடைத்து விடலாம். அமாவாசையன்று இந்த பரிகாரத்தை செய்தால்!

kadan amavasai

நாம் எல்லோரும் பணக்கஷ்டம் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். சிலருக்கு இந்த கடன் தொகை என்பது மிக சிறிய அளவில் இருக்கும். ஆனால் பல பேருக்கு பல தலைமுறையாக கடன் தொல்லை கழுத்தை நெரித்து வந்து கொண்டிருக்கும். அப்பா வாங்கிய கடனுக்கு, மகன் வட்டியை கட்டிக் கொண்டிருப்பார். ‘நம்முடைய குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கின்றோமோ இல்லையோ! கண்டிப்பாக கடனை வைக்கக்கூடாது.’ என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைத்தால் ‘கடன்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்காது. கடன் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமா? என்றால், இல்லை. கடன் தொல்லை இருப்பவர்கள், வீட்டில் தன தான்ய லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை தரும்.

money

அமாவாசை நாள் என்பது நம் பித்ருக்களின் ஆசீர்வாதத்தை நமக்கு பெற்றுத் தரக்கூடிய நாளாக அமைந்திருக்கிறது. இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் தவறாமல் செய்வது, நமக்கு நல்ல பலனைத் தரும். அமாவாசை திதி அன்று நாம் செய்யக்கூடிய கடமைகளையும், வழிபாட்டு முறைகளையும் சரியாக செய்யவில்லை என்றாலும் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். இதனால் உங்கள் வீட்டு முறைப்படி அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை தவறாமல் செய்துவிடுங்கள்.

இந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் ஒரு சிறிய பரிகாரம், நம்முடைய கடனை தீர்ப்பதற்கு சுலபமான வழியை காட்டும் என்று நாம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன வழி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள் சிகப்பு துணி, 21 உலர்ந்த வெள்ளை பேரிச்சம் பழம், பச்சை நிற நூல். இதை வைத்துதான். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பார்க்கலாம்.

white-dates

இந்த அமாவாசை தினத்தன்று உங்களுடைய முன்னோர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முறைப்படி செய்து முடித்துவிட்டு, உங்களது வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். சிறிய அளவிலான சதுர வடிவில் இருக்கும் சிகப்பு துணி ஒன்றை புதியதாக வாங்கிக் கொண்டு, அதில் 21 வெள்ளை பேரிச்சம் பழத்தை வைத்து பச்சைநிற நூலில் மூன்று முடிச்சுகள் போட்டு, கட்டி உங்கள் வீட்டு பீரோவிலோ பணம் வைக்கும் இடத்திலோ அதாவது நீங்கள் எந்த இடத்தில் பணம் வைப்பீர்களா அந்த இடத்தில் இதை வைத்து விட வேண்டும் அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை செய்து விட்டு, அன்றைய தினமே, உங்களது கடன் தொகையில் ஒரு சிறு தொகையை கடன்காரனுக்கு திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம்.

- Advertisement -

வேறு எந்த ஒரு மந்திரமும், தந்திர வித்தைகளும் இதில் இல்லை. இந்த முடிச்சை தயார் செய்யும்போது, உங்களது குல தெய்வத்தையும், உங்களது முன்னோர்களையும், மனதார நினைத்தாலே போதும். உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்ந்து தன தானியத்திற்க்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. செல்வ செழிப்போடு நீங்கள் வாழ்வதற்கு இந்த பரிகாரம் ஒரு நல்ல வழிதான். கோடி ரூபாய் கடனை ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்றால்? இல்லை. அந்த கடனை தீர்ப்பதற்கான மன தைரியம், அந்த கடனை தீர்க்க பணம் வரும் வழி, இவைகளை இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் காட்டும். நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ள பரிகாரத்தில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

white dates1

இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. ஆனால் நீங்கள் வாங்கும் உலர்ந்த பேரீச்சம் பழத்தில் சிறிதளவு தண்ணீர் கூட இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  வருடத்திற்கு ஒரு முறை இந்த பேரிச்சம் பழத்தை எடுத்து ஓடும் ஆற்றிலோ அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதியதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குடும்பத்தில் தோஷமா? இறந்து போனவர்கள் நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadan nivarthi pariharam Tamil. Kadan prachanai theera Tamil. Kadan theera valigal Tamil. Kadan theera parigaram Tamil.