- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய தடையை நீக்கி வெற்றியைத் தரும் பரிகாரம்

காரிய தடையை நீக்கி வெற்றியைத் தரும் பரிகாரம்

- Advertisement -

நாம் செய்யக்கூடிய எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் அது வெற்றியடைந்தால்தான் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். பலருக்கும் இந்த வெற்றிக் கனி என்பது எட்டா தூரத்திலேயே இருக்கிறது. எவ்வளவு முயற்சிகளை செய்தாலும் எப்படி முயற்சிகளை செய்தாலும் அவர்களால் வெற்றியை அடைய முடியாத சூழ்நிலைகூட இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான மஞ்சள் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நமக்கு வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்றால் அதுக்கு நவகிரகங்களில் இருக்கக்கூடிய குரு பகவானின் அருள் என்பது வேண்டும். அதேபோல் நம்முடைய வெற்றியை தடை செய்யக்கூடிய காரிய தடைகளை நீக்குவதற்கு விநாயகப் பெருமானின் அருளும் வேண்டும். இவர்கள் இருவரின் அருளையும் ஒருசேர பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரமாக தான் இந்த பரிகாரம் திகழ்கிறது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு குருபகவானுக்கு உகந்த விரலி மஞ்சள் விநாயகருக்கு உகந்த அருகம்புல்லும் இருந்தால் போதும்.

- Advertisement -

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்யக்கூடிய அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி நமக்கு வெற்றிகள் உண்டாகும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அமைதியாக அமர்ந்து எந்த காரியத்தை நாம் செய்யப் போகிறோமோ? அந்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் நிற நூலை எடுத்து அதில் ஒரு இனுக்கு அருகம்புல்லையும் ஒரு முனை உடையாத விரலி மஞ்சளையும் ஒன்றாக வைத்து கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

எப்பொழுது அந்த காரியம் நிறைவடைகிறதோ அப்பொழுது இந்த விரலி மஞ்சள் எடுத்து விட வேண்டும். அருகம்புல்லை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு விரலி மஞ்சள் நம்முடைய சமையலுக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் பொழுது மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று இல்லை. அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும், தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும், வேலையில் சிறந்து விளங்க வேண்டும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அருகம்புல் மற்றும் மஞ்சளை தொடர்ச்சியாக தங்களுடைய வீட்டில் வைத்துக் கொண்டால் போதும். ஒருமுறை இதை வைத்து விட்டால் போதும் மறுபடியும் அருகம்புல் காய்ந்த பிறகு புதிதாக அருகம்புல்லை மாற்றிக் கொள்ளலாம். மஞ்சளில் பூச்சி ஏதாவது வைப்பது போல் தோன்றினால் அப்பொழுது மஞ்சளை மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: அடமான நகையை திருப்ப உதவும் பரிகாரம்

முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளும் குரு பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் நம்முடைய அன்றாட காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி வெற்றிக்கு மேல் வெற்றி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்