- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval31-10-2024  கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்.

31-10-2024  கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்.

- Advertisement -

கோலகலமாக இன்றைய தினம் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்திருப்பீர்கள். இந்த தீபாவளி தினத்தில் நம்முடைய கடன் அனைத்தும் நம்மை விட்டு விலக வேண்டும், இன்று நம் மீது விழுந்த கண் திருஷ்டியும் விலக வேண்டும், ஐஸ்வர்யம் நம்முடைய வீட்டில் மேலும் மேலும் பெருக வேண்டும் என்றால், இன்று இரவு தூங்க செல்வதற்கு முன் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிமூன்று மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடன் தீர அம்மாவாசை பரிகாரம்

இன்று தீபாவளி திருநாள். குபேரருக்கு உகந்த நாள். மகாலட்சுமிக்கு உகந்த நாள். இந்த திருநாள் வியாழக்கிழமையான குருநாளில் வந்திருக்கிறது. குபேரருக்கு சொந்தமான நாளில் வந்திருக்கிறது. இன்று இரவு அமாவாசை திதியும் பிறந்து விடுகிறது. இன்று இரவு நாம் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரம் நமக்கு கோடான கோடி பலனை கொடுக்கும்.

- Advertisement -

குறிப்பாக உங்களுக்கு இருக்கக்கூடிய மொத்த கடனையும் குறைப்பதற்கு இன்றைய நாள் செய்யும் பரிகாரம் 100% கைகொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று இரவு வீட்டில் இருக்கும் பெண்கள் உங்கள் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விடுங்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த பழத்தை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு என்னுடைய கடன் சுமை எல்லாம் இன்றோடு தீர வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடங்கள் இதே போல மனதை ஒருநிலைப்படுத்தி கடனிலிருந்து விடுபட வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ளலாம். தவறு கிடையாது. பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும், குங்குமத்தை தடவி நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த எலுமிச்சம் பழத்தை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் கொண்டு வந்து பிறகு வேண்டுதல் வைத்து, பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை அறுத்து குங்குமம் தடவ வேண்டும். கத்தி குங்குமம் எல்லாம் நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் முன்பே கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள். கூடவே ஒரு சின்ன கிண்ணத்தில் வெல்லத்தையும் கொண்டு வந்து நிலை வாசலுக்கு வெளியில் வச்சிருங்க.

இந்த எலுமிச்சம் பழத்தை வெட்டி இரண்டு பக்கமும் வைத்து விட்டு அந்த வெல்லத்தை எடுத்து தூள் செய்து நிலை வாசலில் இரண்டு பக்கமும் தூவி விடுங்கள். இது எதற்கு தெரியுமா. இரவு நிலை வாசலில் வாயில்லா ஜீவன்கள் வரும். அப்போது அதற்கு பசிக்கும். அந்த நேரத்தில் உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் இந்த இனிப்பு பண்டங்களை சாப்பிட்டால் அதற்கான பசி தீரும். உங்களுக்கான கர்மவினை குறையும் என்பதற்காகத்தான் இந்த எளிய பரிகாரம்.

- Advertisement -

இதையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்குள் சென்று, கை கால் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். பூஜை அறையில் வந்து இறைவனை கண் குளிர பார்த்து குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு தூங்கச் செல்லவும். அமாவாசை இரவு தான் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. இன்று 31.10.2024 மாலை 4:30 மணிக்கு அமாவாசை திதி திறந்து விடுகிறது.

இதையும் படிக்கலாமே: உடல் நலம் சிறக்க வராஹி தீபம்

நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி வரை அமாவாசை திதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் கடன் தொல்லை நீங்கும். கண் திருஷ்டி விலகும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்