- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனை அடைக்கும் கல் உப்பு பரிகாரம்

கடனை அடைக்கும் கல் உப்பு பரிகாரம்

- Advertisement -

கட்டு கட்டாக பணத்தை, கைநீட்டி கடனாக வாங்கி விட்டோம். அதை திருப்பி அடைப்பதற்கு உண்டான வழி தெரியவில்லை. சில பேரிடர் போய் கேட்டால், 10 லட்சம் கடன் இருக்கிறது, 20 லட்சம் கடன், 50 லட்சம் கடன் என்று சொல்லுவார்கள். அவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது, நிம்மதியாக ஒரு வாய் சாப்பாட்டை கூட சாப்பிட கூட முடியாது.

உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று கூட சில சமயம் தோன்றும். சில பேருக்கு கோடிக்கணக்கில் கூட பண பிரச்சினை இருக்கும். இதிலிருந்து வெளிவர எடுக்காத முயற்சிகள் இல்லை. தேடாத வழிகள் இல்லை, ஆனால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சுமக்கக்கூடிய சூழ்நிலைதான் இருக்கிறது என்றால், அதிலிருந்து உங்களை வெளியே கொண்டு வர இந்த எளிமையான கல்லுப்பு பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

பெரிய அளவில் கடன் இருப்பவர்களுக்கும் கூடிய விரைவில் ஒரு விமோசனம் கிடைக்கும். சின்ன சின்ன கடன் வைத்திருப்பவர்கள் முதல் பெரிய கடன் வைத்திருப்பவர்கள் வரை கடன் பிரச்சினையில் சிக்கி இருப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் இதை செய்யலாம்.

கடனிலிருந்து வெளிவர பரிகாரம்

இது மார்கழி மாதம் அல்லவா. ஆகவே பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த பரிகாரத்திற்கு ஒரு பெரிய அகண்ட புது மண் அகல் விளக்கு, கொஞ்சம் கல் உப்பு தேவை. ஒரு பிரியாணி இலை, ஒரு லகு தேங்காய், ஒரு பேனா இந்த பொருட்களை மட்டும் தயார் படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (மண் அகல் விளக்குக்கு பதில் பெரிய புது மண் தட்டு அல்லது மண் சட்டி போல எது இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்).

- Advertisement -

முதலில் அந்த பிரியாணி இலைக்கும் மேலே உங்கள் கடன் பிரச்சனையை எழுத வேண்டும் உதாரணத்திற்கு “ரமேஷிடம் வாங்கிய 10 லட்சம் ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும்” என்று எழுதலாம். இதுவே நீங்கள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால், வீட்டில் லோன் வாங்கி இருந்தால், உங்களுக்கு எது முதலில் பெரிய கடன் பிரச்சனையோ, அந்த கடன் அடைய வேண்டும் என்று எழுத வேண்டும். ஒரு கடனை மட்டும் தான் அந்த பிரியாணி இலையின் மேலே எழுத வேண்டும். பிறகு அந்த மண் பாண்டத்தில் நிரம்ப கல் உப்பு கொட்டிக் கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு தாம்பூல தட்டுக்கு மேலே முதலில் கடன் பிரச்சனை எழுதிய பிரியாணி இலையை வைக்கவும். அதன் மேலே தயார் செய்து வைத்திருக்கும் இந்த மண் பாண்டத்தை கல் உப்பு போட்டு வைத்து, அந்த கல்லுப்புக்கு மேலே ஒரு ஒரு லகு தேங்காயை வைத்து, மனம் உருகி நீங்கள் வாங்கிய அந்த கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

15 நிமிடம், 20 நிமிடம், 30 நிமிடம், முதுகு தண்டுவடத்தை நேராக வைத்து அமர்ந்து உள்ளம் உருகி நம்பிக்கையுடன் இந்த வேண்டுதலை வைத்தால் எவ்வளவு பெரிய கடனும் சீக்கிரம் அடையும். லகு தேங்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்கள் கடன் அடைந்த பிறகு தான், அந்த பிரியாணி இலையை எடுத்து நெருப்பில் பொசிக்கி விட வேண்டும்.

கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும். அந்த தேங்காயை எடுத்து கிணற்றிலோ ஓடும் தண்ணீரிலோ விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்பவர்கள் கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவதுடன் சேர்த்து, திரும்பவும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வராது. இந்த எளிமையான பரிகாரத்தை இந்த மார்கழி மாதம் செய்து, தினமும் அந்த தயார் செய்து வைத்திருக்கும் கல்லுப்பிடம் உங்களுடைய பிரார்த்தனையை வைத்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: கடினமான கஷ்டங்கள் விலக முருகன் தேங்காய் பரிகாரம்

அந்த பிரியாணி இலையில் எழுதி வைத்த கடன் சுமை உங்களை விட்டு சீக்கிரம் விலகும். இது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரம். குலதெய்வத்தை நினைத்து செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்