- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் அடைய பானை பரிகாரம்

கடன் அடைய பானை பரிகாரம்

- Advertisement -

பணம்தான் அனைத்திற்கும் காரணமாக திகழக்கூடியது. அந்த பணத்தை சேர்த்து வைப்பதற்கு பல வழிகளில் நாம் முயற்சி செய்கிறோம். சம்பாதிப்பதற்கும் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். இந்த வழியில் இருந்து பணம் நமக்கு வரும் என்ற நம்பிக்கையில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பணத்தை வாங்கி பயன்படுத்தி இருப்போம். ஆனால் நாம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நமக்கு பணம் வராததால் வாங்கிய பணத்தை திரும்ப தர முடியாத சூழ்நிலைக்கு ஆளாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பானை பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் பஞ்சமி, தசமி, நவமி, பௌர்ணமி போன்ற நாட்களில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது மண் பானை தான். இந்த பரிகாரத்திற்காக நாம் ஒரு சிறிய அளவிலான மண்பானையை புதிதாக வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கச் செல்லும் பொழுது வீட்டில் இருந்து ஒரு சாக்பீஸை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அந்த மண் பானை விற்கும் கடைக்கு சென்று மண்பானையை வாங்குவதோடு அதனுடன் வேறு ஏதாவது ஒரு மண் சம்பந்தப்பட்ட பொருளையும் சேர்த்து வாங்க வேண்டும்.

- Advertisement -

ஒன்றாக வாங்க கூடாது. இரண்டாக வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கி வரும் பொழுது நீங்கள் எடுத்துச் சென்று சாக்பீஸை அந்த மண்பானையில் டிக் செய்து எடுத்து வர வேண்டும். வெறும் மண்பானையாக எடுத்து வரக்கூடாது. பிறகு நாட்டு மருந்து கடைகள் மற்றும் பூஜை சாமான் விற்கும் கடைகளில் கங்கா தீர்த்தம் என்று கிடைக்கும். அந்த தீர்த்தத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சதுர வடிவில் இருக்கக்கூடிய வெள்ளி நாணயத்தை வாங்க வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு கண்டிப்பாக முறையில் சதுர வடிவத்தில் இருக்கக்கூடிய நாணயம் தான் வேண்டும். வட்ட வடிவில் இருக்கக்கூடிய தானியம் உபயோகப்படுத்தக் கூடாது. இவை அனைத்தையும் வீட்டிற்கு வாங்கி வந்து முதலில் மண் பானையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த மண்பானையில் கங்கா தீர்த்தத்தை ஊற்ற வேண்டும். அந்த தீர்த்தத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வெள்ளி நாணயத்தை போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இந்த பானையை உங்கள் வீட்டில் எந்த இடத்தில் சூரிய வெளிச்சம் படாமல் இருக்குமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி நீங்கள் வைப்பதன் மூலம் உங்களுக்கு வரவேண்டிய பணம் வர ஆரம்பிக்கும். அதனால் உங்களுடைய கடன் பிரச்சினைகள் தீரும். இந்த பரிகாரத்தை செய்த பிறகு உங்களுக்கு பணவரவு வர ஆரம்பித்து விட்டது.

அதனால் உங்களுடைய கடன் பிரச்சனை குறைய ஆரம்பித்து விட்டது என்னும் பட்சத்தில் இந்த பானையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக் கூடிய அரச மரத்தடிக்கு செல்ல வேண்டும். அரச மரத்தடியில் இந்த பானையில் இருக்கக்கூடிய கங்கா தீர்த்தத்தை ஊற்றிவிட்டு பானையை அங்கேயே வைத்து விட வேண்டும். இதற்குள் போட்டிருக்கும் அந்த வெள்ளி நாணயத்தை மட்டும் திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வந்து பணம் நகை வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த வெள்ளி நாணயத்தை வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது.

இதையும் படிக்கலாமே:வாரா கடனை வர வைக்கும் பைரவர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்பவர்களுக்கு எந்தெந்த வகையில் பணவரவு வர வேண்டியது இருக்கிறதோ அந்தந்த வகையில் எல்லாம் பணவரவு ஏற்பட்டு அதன் மூலம் கடன் பிரச்சினைகள் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்