ஜாதகப்படி யாரெல்லாம் அதிகம் கடன் வாங்குவார்கள் தெரியுமா ?

astrology

ஒரு மனிதன் எளிமையாக வாழ்வதே சிறந்தது என்பது நம் முன்னோர்களின் கருத்தாகும். உழைப்புக்கேற்ற செல்வத்தில் சிக்கனமாக வாழ்ந்தால் எந்த ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் ஒரு சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பணத்தை கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. “கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்” என “கம்பராமாயணத்தில்” ஒரு வரி இடம்பெற்றிருக்கும். அந்த அளவிற்கு ஒருவரின் மனநிலையை பாதிக்கக்கூடியது கடம் சுமை. இப்போது ஜோதிட ரீதியாக யார் யாருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் என்பது குறித்து இங்கு காண்போம்.

astrology

ஜாதகத்தில் கடன் குறித்த விவரங்களை அறிய நாம் முதலில் ராசி மற்றும் அதற்கான அதிபதியை பற்றி அறிய வேண்டும். அதோடு சுப அசுப அல்லது பாப கிரகங்கள் பற்றியும் அறிய வேண்டும்.

ராசிஅதிபதி
மேஷம்செவ்வாய்
ரிஷபம்சுக்கிரன்
மிதுனம்புதன்
கடகம்சந்திரன்
சிம்மம்சூரியன்
கன்னிபுதன்
துலாம்சுக்கிரன்
விருச்சிகம்செவ்வாய்
தனுசுகுரு
மகரம்சனி
கும்பம்சனி
மீனம்குரு

சுப கிரகங்கள்:
குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.

அசுப கிரகங்கள்:
சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.

astrology

- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6 ஆம் வீடு நோய், கடன், எதிரிகளின் நிலையை பற்றி கூறும் வீடு என கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் இந்த ஆறாம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தாலோ அல்லது பாப கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ அந்த நபருக்கு அவ்வப்போது கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். லக்னத்திற்கு அதிபதி 6 ஆம் வீட்டிலும் (லக்னத்தில் இருந்து ஆறாவது கட்டம்) ஆறாம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுதும் கடன் நீடிக்கும்.

உதாரண ஜாதக கட்டம்:
kadan rasi kattam

உதாரண விளக்கம்:
மேலே உள்ள உதாரண ஜாதக கட்டத்தில் மீன ராசி தான் லக்னம். இந்த ராசிக்கு அதிபதி குரு ஆவர். இந்த மீன ராசிக்கு 6 ஆம் ராசியாக வருவது சிம்மம் இதன் அதிபதி சூரியன். இந்த சூரியன் கிரகம் மீன ராசியிலும், மீன ராசியின் அதிபதி குரு சிம்ம ராசியிலும் இருந்தால் கடன் ஏற்படும்.

லக்னத்தின் அதிபதி சுப கிரகமாக இருந்து ஆறாம் வீட்டின் அதிபதியும் சுபகிரகமாக இருந்து அவரின் திசை நடைபெற்றால் திருமணம், புது வீடு கட்டுதல், புதிய வாகனங்களை வாங்குதல் போன்ற விடயங்களுக்கு கடன் வாங்கி அதை மீண்டும் முழுமையாக அடைக்க கூடிய அமைப்பு ஏற்படும்.

astrology

ஒருவரின் ஜாதகத்தில் சனி மற்றும் கேது கிரகம் இணைந்து எந்த வீட்டில் இருந்தாலும் அந்த நபருக்கு பண தட்டுப்பாடு ஏற்படும். மேலும் மிகப்பெரிய கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தமுடியாமல் மனம் வெதும்பும் ஒரு நிலையையும் ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகப்படி யாருக்கெல்லாம் அதிக சம்பளம் கிடைக்கும் தெரியுமா ?

நீங்களாகவே ஜாதகம் பார்ப்பது எப்படி என்ற தகவல் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.