- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு

கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு

- Advertisement -

யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான் யோசிப்போம். இவனுக்கு ஏன்டா கடன் கொடுத்தோம் என்று. அந்த அளவுக்கு, நம்மிடம் கைநீட்டி பணத்தை வாங்கியவர்கள் நமக்கு மோசம் செய்து இருப்பார்கள். சண்டையும் போட்டு இருப்பாங்க.

என்னமோ அவங்க பணத்தை நாம வச்சிருக்க மாதிரி. கஷ்டம் என்று கேட்டவனுக்கு, பணம் இல்லை, என்று சொல்லி இருந்தால் கூட இவ்வளவு பகை வந்து இருக்காது. ஆனால் பணத்தை கொடுத்துவிட்டு பகையை சம்பாதித்து இருப்போம். நீங்கள் யாரிடமாவது இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டீர்களா. கொடுத்த பணத்தை திரும்பவும் வசூல் செய்ய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கொடுத்த பணத்தை திரும்பவும் பெற விநாயகர் பரிகாரம்

இந்த பரிகாரத்தை தசமி திதியில் செய்ய வேண்டும். காலண்டரில் பார்த்தால் உங்களுக்கே தெரியும். தசமி திதி என்று வருகிறது என்பது. தசமி திதி அன்றே கடைக்கு சென்று நவதானியம் ஒரு பாக்கெட் வாங்கிக்கோங்க. நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அதைக் கொண்டு வந்து ஒரு தாம்பூல தட்டில் கொட்டி அந்த நவதானியத்தின் மேலே உங்களுக்கு யார் கடன் கொடுக்க வேண்டுமோ, அந்த நபரின் பெயரை எழுதி, பிள்ளையாரை நினைத்து இந்த நபர் என்னிடம் வாங்கிய பணத்தை அவரே திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட வேண்டும் என்று, பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

தட்டில் இருக்கும் நவதானியம் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விடுங்கள். பிறகு 2 மணி நேரம் கழித்து இந்த நவதானியத்தை ஒரு கவரில் கொட்டி அப்படியே விநாயகர் கோவில் அர்ச்சகர் தானமாக கொடுக்கலாம். இது ஒரு வழி.

- Advertisement -

உங்களால் இந்த பொருளை விநாயகர் கோவில் அர்ச்சகருக்கு தானம் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது. இந்த நவதானியத்திற்கு மேலே ஒரு பிள்ளையாரை வைத்து மனமுருகி பிரார்த்தனை செய்து, இந்த நவதானியத்தை கொண்டு போய் அப்படியே மரம் செடி கொடிகளுக்கு கீழே அல்லது புற்றுக்கு பக்கத்திலோ, தூவி விட வேண்டும். அவ்வளவுதான்.

தொடர்ந்து மூன்று தசமி திதி விநாயகரை வேண்டி இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் ஏமாந்த பணம் மீண்டும் தானாக உங்களைத் தேடி வந்துவிடும். உங்களிடம் பணத்தை வாங்கி விட்டு ஒருவன் ஊரை விட்டு ஓடியே போய் விட்டான். அவன் கொடுக்க மாட்டான் என்று முடிவு பண்ணிட்டீங்க, விநாயகரின் மேல் உள்ள நம்பிக்கையில் தசமி திதியில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

ஊரை விட்டு ஓடியவன் கூட உங்கள் பணத்தை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விடுவான். அந்த அளவுக்கு அவனுடைய நிலைமையை விநாயகர் மாற்றி விடுவார். நாம் யாருக்கு பணம் கொடுத்தோமோ அவனுடைய நிலைமையை நன்றாக மாறிவிட்டால் பிரச்சனை இருக்காது. ஆகவே நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று விநாயகரிடம் பிரார்த்தனை வைக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களோ, அவன் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

நிச்சயம் உங்களது வேண்டுதல் பலிக்கும். இது விளையாட்டுக்காக சொல்லக்கூடிய வார்த்தை கிடையாது. இது தான் உண்மை. அதனால் தான் அந்த நவதானியத்தில் யாரிடம் கடனை கொடுத்தீர்களோ, அவனுடைய பெயரை எழுதச் சொல்லி பரிகாரத்தை நமக்கு முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் விநாயகரின் பாதத்தை பற்றிக் கொள்ளுங்கள். சீக்கிரம் நீங்கள் இழுந்த பணம் உங்களைத் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: ஏப்ரல் மாதத்தில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்

சில பேர் பணம் மட்டும் இல்லாமல் தங்களுடைய நகை, சொத்து பத்திரம் இவைகளை எல்லாம் கூட கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். அவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்