கடனாக கொடுத்த பணம், ஏமாற்றி அபகரித்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்க இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை மட்டும் செய்யுங்கள்!

sevvai-cash

நீங்கள் கடனாக கொடுத்த பணம், பொருள் போன்றவை ஒரு சிலரால் திருப்பி கொடுக்க முடியாமல் போகலாம். நீங்கள் எத்தனையோ முறை கேட்டும், அலைந்து திரிந்தும் உங்களால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்க முடியாமல் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் இக்கட்டான நிலைமையில் மாட்டிக் கொண்டு இருப்பீர்கள். அவர்களிடமிருந்து பணம் வாங்காவிட்டாலும் பிரச்சனை வாங்கினாலும் பிரச்சினை என்கிற மாதிரி சூழ்நிலை அமைந்து இருக்கும். அது மட்டுமில்லாமல் நிறைய பேருடைய பணம் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பது இருப்பார்கள்.

kadan

இந்த பிரச்சினையை தீர்க்க நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் இருந்து ஒரு தாந்திரீக பரிகாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நியாயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணமும், சொத்துக்களும் திரும்ப உங்களுக்கே வந்து சேர்வதற்கு இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்துகின்ற தெற்குத்திசை வீட்டில் முக்கியமான திசையாக இருக்கும். பொதுவாகவே தெற்குப்பகுதி நல்ல விஷயங்களுக்கு உகந்தது அல்ல என்பார்கள். அதர்மத்தை அழிக்க நவகிரகங்களில் சனிக்கு நிகராக செவ்வாய் பகவானுக்கு அதிக ஆற்றல் உண்டு. செவ்வாய் பகவானுக்கு உரிய திசை தெற்கு பகுதி ஆகும். எனவே உங்கள் வீட்டின் தெற்குப் பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

sevvai

நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதி வீட்டிற்கு உள்ளேயும் அல்லது வெளியேயும் கூட இருக்கலாம் ஆனால் தெற்கு பகுதியாக இருக்க வேண்டும். அந்தப் பகுதியில் செவ்வாய் பகவானை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள். அதில் உங்கள் குலதெய்வத்தை ஆவாஹனம் செய்யுங்கள். இது போல் கலசத்தில் தண்ணீர் வைத்து உங்கள் குலதெய்வத்தை அழைத்தால் உடனே ஓடி வந்து தண்ணீரில் ஆவாஹனம் ஆகி விடுவதாக ஐதீகம் உள்ளது.

- Advertisement -

பின்னர் கலசத்திற்கு முன்பாக 7 புதிய மண் அகல் விளக்குகளை வையுங்கள். அதில் நிரம்ப நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பொதுவாக விளக்கிற்கு இரண்டு திரிகளை வைப்பது ஐதீகம். எனவே இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றுங்கள். பின்னர் தூபம் கொளுத்தி ஆராதனை காண்பியுங்கள். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை செவ்வாய் பகவானிடமும், குலதெய்வத்திடமும் வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்.

agal-vilakku

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். தொடர்ந்து வரும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலையில் சூரியன் உதிக்கும் 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக செய்து முடித்து விட வேண்டும். இதே போல் தொடர்ந்து 21 வாரங்கள் செய்து வாருங்கள்.

sunrise

இதனால் உங்களிடம் கடனாக வாங்கிய பணத்தைக் திருப்பிக் கொடுக்காதவர்கள் தாங்களாகவே முன்வந்து கொடுத்து விடுவார்கள். உங்களிடமிருந்து ஏமாற்றி வாங்கிய சொத்துக்களும், நீங்கள் பறிகொடுத்த பொருட்களும் மீண்டும் உங்களை தானாகவே வந்து சேரும் என்பது நம்பிக்கை. இதனை நம் முன்னோர்கள் அனுபவரீதியாக கடைபிடித்து வந்தது. நாமும் நம் பிரச்சனை தீர இந்த பரிகாரத்தை செய்து பயன்பெறுவோம்.

இதையும் படிக்கலாமே
உங்களிடம் இருக்கும் தங்கம், உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா? தங்கம் உங்கள் கையை விட்டு போவதற்கு, முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.