உங்களிடம் இருக்கும் தங்கம், உங்கள் கையை விட்டு போகாமல் உங்களிடமே இருக்க வேண்டுமா? தங்கம் உங்கள் கையை விட்டு போவதற்கு, முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

gold-lakshmi
- Advertisement -

நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்து நிற்பதற்கு, ஒரு குண்டுமணி தங்கத்தையாவது நம் வைத்திருக்க வேண்டும். நாம் அணிந்திருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். அந்த தங்கத்தை நாம் எந்த அளவிற்கு பாதுகாத்து வைக்கின்றோமோ, அந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யமும், மன நிறைவும், அமைதியும் பெருகிக்கொண்டே இருக்கும். தங்கம் வைத்திருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று சொல்லிவிட முடியாது. அந்த தங்கத்தோடு, 16 செல்வங்களையும் பெற்று, ஐஸ்வர்யத்தை நிலைக்கச் செய்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வது தான் உண்மையான பணக்கார வாழ்க்கை.

Gold rate in Saravana stores

100 பவுன் ஆயிரம் 1000 பவுன் தங்கத்தை சேர்த்து வைப்பவர்களை பற்றி நாம் இந்த இடத்தில் பேசப் போவது கிடையாது. அதற்காக தங்கத்தை அதிகமாக வைத்திருப்பவர்கள் எல்லாம் தப்பான வழியில் தான் தங்கத்தை வாங்கி உள்ளார்கள் என்று சொல்ல வரவில்லை. கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைக்கலாம் என்று நினைப்பவர்கள் ஒரு விதம்.

- Advertisement -

தங்கம் வாங்குவதற்காகவே காசு சேர்த்து வைப்பவர்கள் ஒருவிதம் அல்லவா? நாம் அணிந்து கொண்டிருக்கும் தங்கம், நம்முடைய பெட்டியில் வைத்திருக்கும் நம்முடைய செயின், கம்மல், கொலுசு, வளையல், மோதிரம் இப்படியாக கஷ்டப்பட்டு காசு சேர்த்து உழைத்து வாங்கி வைத்திருக்கும், நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யமான சிறிதளவு சொர்ணத்தை எப்படி பாதுகாக்க போகின்றோம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Gold

தங்கத்திற்கு தோஷத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக உள்ளது என்று சொல்லுவார்கள் அல்லவா? நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் சிறிய குண்டுமணி அளவு தங்கத்தை அடுத்தவர்கள் கெட்ட எண்ணத்தோடு பார்த்தால் கூட அது உங்களிடத்தில் நிச்சயம் நிலைத்து நிற்காது. ஆசையாக நீங்கள் அணிந்திருக்கும் நகை மிகவும் அழகாக இருக்கிறது என்று சொல்வது, ஒரு விதம். ஆனால், இவர்களுக்கு மட்டும் எப்படித்தான் இந்த தங்க நகைகள் கிடைக்கின்றதோ? எப்படித்தான் காசு சேர்த்து வைத்து வாங்குகிறார்களோ? என்று பொறாமை கொண்டு பார்ப்பவர்களின் எண்ணம் என்பது வேறு.

- Advertisement -

இதற்காக நாம் வைத்திருக்கும் தங்க நகைகளைப் போட்டு அழகு பார்க்காமல் இருக்க முடியுமா? ஆனால் என்ன செய்வது, சில பேரின் கண்கள் நம்மிடம் இருக்கும் நகையை பார்த்து பொறாமை படுகிறது. இந்த இடத்தில் உங்களுடைய நகையை பாதுகாப்பதற்கு ஒரு சின்ன பரிகாரம் உள்ளது. இப்படிப்பட்ட கண்திருஷ்டியை கொண்ட நகைகள், சிலசமயங்களில் நம்மிடம் தங்காமல் போய்விடும்.

golden bangle

ஏதாவது விசேஷ தினங்களில், உங்களது நகையை நீங்கள் அணிந்து கொண்டாலும், அல்லது விசேஷங்களுக்கு அணிந்துகொண்டு சென்றுவிட்டு வந்தாலும், அந்த நகைகளை  கொஞ்சம் கோமியம் கலந்த தண்ணீரில் கழுவி, மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி, நன்றாக துடைத்து உலர வைத்து, மீண்டும் பத்திரமாக எடுத்து பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு கப் அளவு தண்ணீரில், இரண்டு ஸ்பூன் கோமியம் ஊற்றினால் கூட போதும். தங்கத்தில் இறக்கும் தோஷம் நீங்கிவிடும்.

- Advertisement -

pasu-komiyam

கோமியம் என்று இப்போது கடைகளில் எல்லாம் பாட்டிலில் கிடைக்கின்றது. முடிந்தால், மாடு வைத்திருப்பவர்களிடம் சொல்லி, காலையில் அந்த பசு மாடு முதல் முறையாக கொடுக்கும் கோமியத்தை பிடித்து, அந்த கோமியத்தை பயன்படுத்துவது நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Today Gold rate

அடுத்தவர்களின் கண் திருஷ்டி தோஷம் அனைத்தையும் நீக்கி விட்டு, அந்த தங்க நகை உங்களை விட்டுப் போகாமல் இருக்க இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும். முடிந்தால் கோவில்களில் அபிஷேகத்தின் போது, உங்களது நகைகளை சுவர்ண அபிஷேகத்திற்கு கொடுப்பது நம்முடைய நகைகளில் உள்ள தோஷத்தை நீக்கும். அதை பொறுப்பாக கொடுத்து பொறுப்பாக வாங்கிக் கொள்வது உங்களுடைய கடமை. உங்களது நகைகளை உங்களது குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து, முடிந்தவரை அடுத்தவர்கள் அணிந்துகொள்ள இரவலாகக் கொடுப்பதை தவிர்த்து விடுவது நமக்கு நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
திருஷ்டி பொருளை தெரியாமல் மிதித்து விட்டால் இதெல்லாம் நடக்குமா? இதில் இருந்து தப்புவது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -