- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினை தேய தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கடன் பிரச்சினை தேய தேய்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர். நமக்கு எப்பேர்பட்ட கெட்ட காலம் இருந்தாலும் அந்த காலத்தை மாற்றி நல்ல காலமாக மாற்றும் அற்புதமான கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட இருவரிடம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் கண்டிப்பான முறையில் அவரின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். அதிலும் குறிப்பாக கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு தேய்பிறை அஷ்டமி நாளில் பூசணிக்காய் தீபத்தை எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கஷ்டங்களில் ஒன்றாக திகழ்வதுதான் கடன் தொடர்பான பிரச்சனைகள். கடன் பிரச்சினை என்பது வந்து விட்டாலேயே அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறும். அப்படி மாறிய வாழ்க்கையை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு கால பைரவர் நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருப்பார். அப்படிப்பட்ட காலபைரவரின் அருளை பெறுவதற்கு தேய்பிறை அஷ்டமி நாள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் கால பைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே தேய்ந்து போகும்.

- Advertisement -

பொதுவாக மாதத்தில் இரண்டு முறை அஷ்டமி திதி வரும். அதிலும் தேய்பிறை அஷ்டமி நாளில் தான் அருகில் இருக்கக்கூடிய பைரவர் ஆலயத்தில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்படிப்பட்ட அபிஷேக ஆராதனைகள் பல ஆலயங்களில் ராகு காலத்தில் தான் நடைபெறும். இந்த முறை ஜூன் மாதம் 18ஆம் தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி என்பது வருகிறது. அன்றைய தினம் ராகு காலம் என்பது 12 மணியிலிருந்து 1:30 மணிக்குள் வரும். இந்த நேரத்தில் நாம் அருகில் இருக்கக்கூடிய பைரவர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் பொழுது சிறிய அளவிலான பூசணிக்காயை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அதை சரிசமமாக இரண்டாக நறுக்கி அதற்கு நடுவில் இருக்கக்கூடிய விதை பகுதிகளை நீக்க வேண்டும். பிறகு பூசணிக்காய்க்கு வெளிப்புறத்தில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை காலபைரவரை எட்டு முறை வலது புறமாகவும் எட்டு முறை இடது புறமாகவும் சுற்றி அவருக்கு முன்பாக வைத்து விட வேண்டும். இப்படி செய்து விட்டு காலபைரவரின் அஷ்டகத்தை முழுமனதோடு பாராயணம் செய்து அவரை எட்டு முறை வலம் வந்து வழிபாடு செய்ய காலபைரவரின் அருளால் கடன் பிரச்சினைகள் காணாமல் போகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்கவும், மன பயம் தீரவும்

கால பைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி அன்று இந்த முறையில் முழுமனதோடு அவரை வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்க்கையை பாதிப்படையச் செய்யக்கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்