வாழ்க்கையில் நாம் செய்யவே கூடாத தவறுகள் என்று சில உள்ளது. அதை எல்லாம் எந்த சூழ்நிலையிலும், எந்த கோபத்திலும், எந்த அவசரத்திலும் செய்து விடவே கூடாது. அப்படிப்பட்ட சில தவறுகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தவறுகளை எல்லாம் செய்துவிட்டு எத்தனை புண்ணிய கோவிலுக்கு ஏறி இறங்கினாலும், விமோசனம் கிடைக்காது. பாவமன்னிப்பு கிடைக்காது.
எவ்வளவு தான தர்ம காரியங்கள் செய்தாலும் உங்களுக்கான புண்ணியம் வந்து சேராது. உங்களுக்கான கஷ்டத்தை நீங்கள் அனுபவத்தே தீர வேண்டும். அப்படி ஒரு பெரிய தவறை நான் ஏன் செய்யப் போகின்றேன், என்று நினைக்காதீங்க. அன்றாடும் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய தவறுதான் இது. அந்த தவறுகள் என்ன. இதற்கும் பிராயசித்தம் உண்டு என்றால் அதற்கு என்ன பரிகாரம் செய்வது ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோமா.
செய்யக்கூடாத தவறுகள்
நமக்கு கீழ் நிலையில் இருப்பவர்கள், நமக்கு கீழே வேலை செய்பவர்களை எல்லாம் அனாவசியமாக திட்டக்கூடாது. பொருளாதாரத்தில் நம்மை விட குறைந்த இடத்தில் ஒருவர் இருக்கிறார் என்றார் அந்த பொருளாதாரத்தை வைத்து அவருக்காண தகுதியை நிர்ணயித்து தாழ்த்தி நடத்தவே கூடாது.
உதாரணத்திற்கு நம் வீட்டிற்கு வந்து குப்பை எடுத்துச் செல்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், உங்கள் வீட்டை கூட்டி துடைப்பவர்கள், உங்கள் சமையல் அறையில் பாத்திரங்களை தேய்பவர்கள், உங்கள் கழிவறையை சுத்தம் செய்பவர்கள், உங்களுடைய முடியை திருத்துபவர்கள், உங்களுடைய ஆடையை வெளுப்பவர்கள், இவர்களெல்லாம் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் எக்காரணத்தைக் கொண்டும் தகாத வார்த்தை கொண்டோ அவர்களுடைய மனது நோகும் படியோ திட்டவே கூடாது என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.
இவர்களிடத்தில் பணம் கொடுத்து வேலை வாங்குவது என்பது வேறு. ஆனால் அதையும் தாண்டி சில பேர் இவர்களுடைய மனது நோகும் படி பேசுபவர்கள். இவர்கள் செய்யும் தொழிலையும் இவர்களுடைய தோற்றத்தையும் பார்த்து என்றுமே திட்டி விடக் கூடாது. அவர்கள் மனது நோகும்படி பேசக்கூடாது. இப்படிப்பட்ட விஷயங்களை நீங்கள் செய்தால் உங்களுக்கான பாவம் நிச்சயம் வந்து உங்களை சேரும்.
அடுத்தபடியாக குருவுக்கு துரோகம் செய்வது. குருவை திட்டுவது, உங்களுடைய பிள்ளைகளுக்கு இதை சொல்லிக் கொடுங்கள். அவர்களுடைய குருவை திட்டி பேசுவதை அனுமதிக்காதீர்கள். உங்களுடைய பிள்ளை அவர்கள் டீச்சரை ஏதாவது கோபத்தில் திட்டினால் கூட, இது தவறு என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
ஆசிரியர்களுக்கு பெற்றவர்கள் முதலில் மரியாதை செலுத்த வேண்டும். குருவுக்கு பட்டப்பெயர் வைப்பது குருவை அனாவசியமாக பேசுவது போன்ற தவறுகளை எந்த நாளிலும் செய்து விடக்கூடாது. மேல் சொன்ன விஷயங்களை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பதிலாக உங்களுக்கு வேலை செய்பவர்களுக்கு உங்களால் முடிந்த பண உதவிகளை செய்து, அவர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும். செய்த வேலைக்கு கூலி கொடுப்பது என்பது வேறு.
அது போக நல்ல நாள் கிழமைகள் வருகிறது. ஏதோ ஒரு பண்டிகை நாள் வருகிறது, உங்களுடைய பிறந்தநாள் திருமணநாள் உங்கள் பிள்ளைகளுக்கு பிறந்தநாள் என்றால், உங்களால் முடிந்த நல்ல விஷயங்களை, உங்களுக்காக வேலை செய்பவர்களுக்கு செய்யுங்கள். அவர்களுக்கு உண்டான மரியாதையை நீங்கள் செலுத்துவதன் மூலம் உங்களுக்கு நன்மையை நடக்கும். சரிங்க இதுபோல தவறை நான் செய்து விட்டேன். இதற்கான பாவ மன்னிப்பே கிடையாதா.
ஒரே ஒரு வழி இருக்கிறது. வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு செல்லுங்கள். நாம் எல்லோருக்கும் தாய் அவள் தான். மன்னிக்கக் கூடிய குணம் கொண்டவள். அந்த கோவிலுக்கு சென்று சிவசிவா என்று சொல்லி, ஆம் சக்தி கோவிலுக்கு சென்று சிவசிவா என்று சொல்லலாம், தவறு கிடையாது. செய்த தவறுக்கு அவள் காலில் விழுந்து மன்னிப்பை கேளுங்கள். இனி இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று ஒரு உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சனி பகவானால் வரும் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்
நிச்சயமாக பாவத்திற்கான மன்னிப்பு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பரிகாரத்தை செய்துவிட்டு உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் அதாவது உங்கள் வீட்டில் இதுபோல வேலை செய்பவர்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்களுக்கு ஏதாவது ஒரு மரியாதை செலுத்தி அவர்கள் செய்யும் வேலைக்கு நன்றி என்ற வார்த்தையை தெரிவித்தாலே போதும். உங்கள் பாவங்கள் குறையும், என்ற தகவல் உடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.