உங்கள் கடன் பிரச்சனை தீர இம்முறையை பின்பற்றுங்கள்

kadan-prachani

வாழ்க்கைக்கு பணம் அவசியம். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. உலகில் இருக்கும் பல கோடி மக்களும் வாழ்தலுக்கு தேவையான பணத்தை ஈட்ட கடுமையாக உழைக்கின்றனர். இதில் பலருக்கும் தாங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவே பலரும் தங்களின் தேவைகளுக்கு கடன் வாங்குவதையும், தங்களுக்குரிய பொருட்களை அடகு வைத்தும் பணம் பெறுகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் தீர ஜோதிடம் கூறும் வழிமுறைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kadan-loan

கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது தான் அனைவரின் முதன்மையான இலக்காக இருக்கிறது. எனினும் மாறிவரும் கால சூழ்நிலை, நிலையில்லா பொருளாதார நிலை காரணமாக சிலர் தங்களின் அவசிய தேவைகளுக்காகவும், வேறு பல விடயங்களுக்காகவும் கடன் வாங்குகின்றனர். வேறு சிலர் தங்களுக்குரிய சொத்து, நகைகள் போன்றவற்றை அடகு வைத்து கடன் பெறுகின்றனர். இதில் பலர் சரியான காலத்தில் கடனை அடைக்க முடியாமலும், அடகு வைத்த பொருட்களை மீட்க முடியாமலும் வேதனை அடைகின்றனர். இதற்கே ஜோதிட சாஸ்திரம் கூறும் தீர்வுகள் என்ன என்பதை காண்போம்.

கடினமான பொருளாதார சூழ்நிலை காரணமாக கடன் பெறுவதையும், வீட்டின் பத்திரம், நகைகள் போன்றவற்றை அடகு வைத்து பணம் பெறும் போதும் எக்காரணம் கொண்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் எந்த ஒரு நாளிலும் வருகிற சனி ஹோரை சமயங்களில் அடமானம் வைப்பது, கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த சனி ஹோரை நேரத்தில் உங்களின் பழைய கடன்களை அடைப்பதால் மீண்டும் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது.

luxurious-house

அடகு வைக்கும் போதோ, கடன் பெற முயற்சிக்கும் போதோ அன்றைய தினம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பகையான தினமாக இல்லாதவாறு பார்த்து கொண்டு செல்லுதல் நல்லது. நீங்கள் பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடன் தொகையில் வட்டியை மட்டுமோ அல்லது வட்டியுடன் அசல் தொகையையோ மாதத்தில் வரும் கிருத்திகை, கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களிலும், தேய்பிறை நாட்களிலும் திருப்பி செலுத்துவதால் நீங்கள் வருங்காலங்களில் மீண்டும் கடன் வாங்கும் சூழலோ, வீடு, நகைகளை அடமானம் வைக்கும் நிலை ஏற்படாது.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினரும் காரிய வெற்றி பெற செய்ய வேண்டிய வழிபாடு

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kadan prachanai jothidam in Tamil. It is also called as Adagu vaithal in Tamil or Kadan adaika nalla neram in Tamil or Veedu adamanam in Tamil or Adagu nagai meetka sirandha naal in Tamil.