- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் சுமை நீங்க வழிபாடு

கடன் சுமை நீங்க வழிபாடு

- Advertisement -

காலை சுற்றிய பாம்பாக இருப்பது தான் கடன். இந்த கடன் என்ற பிடியிலிருந்து அவ்வளவு எளிதில் நம்மால் வெளியில் வர முடியாது. அதனால் முடிந்த அளவு கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த பார்த்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம்மிடம் பணம் இல்லாத சமயத்தில் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைதான் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையை அதிக நாட்கள் தொடர விடாமல் முடிந்த அளவிற்கு விரைவிலேயே அந்த கடனை அடைத்து விட முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் அந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் விநாயகப் பெருமானுக்கு எந்த முறையில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகப் பெருமானை காரிய வெற்றிக்காக வழிபடுவார்கள். மேலும் ராகு கேது தோஷம் இருப்பவர்களும் விநாயகப் பெருமானை வழிபடுவார்கள். எந்த ஒரு வேண்டுதலுக்காகவும் நாம் நினைத்து வழிபாடு செய்தோம் என்றால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றும் அதே சமயம் விநாயகப் பெருமானுக்கு விநாயகர் பெருமானை மனதார நினைத்து நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடும் சிறந்த பலனைத் தரும் என்றும் அனுபவப்பூர்வமாக கூறப்படுகிறது.

- Advertisement -

கடன் சுமையை நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கடனால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாமல் கஷ்டப்படுபவர்கள், மேலும் கடனை வாங்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகர் பெருமானை சில தாந்திரீக முறைப்படி வழிப்பட கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

இந்த வழிபாட்டை சதுர்த்தி தினத்தன்று தான் நாம் செய்ய வேண்டும். விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படும் இந்த சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். தேய்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் வளர்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் அன்றைய தினம் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு எமகண்ட நேரத்தில் செல்ல வேண்டும்.

- Advertisement -

அங்கு இருக்கும் விநாயகருக்கு அகத்திக் கீரையால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் இலுப்பை எண்ணெயை ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து சதுர்த்தி தினத்தன்று நாம் விநாயகர் பெருமானை வழிப்பட நம்முடைய கடன் பிரச்சனைகள் தீரும்.

ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் தங்களுடைய வீட்டிலேயே விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு தங்களுக்குத் தெரிந்த விநாயகர் மந்திரத்தை கூறி அகத்திக் கீரையால் அர்ச்சனை செய்யலாம். மறுநாள் காலையில் இந்த கீரையை எடுத்து பசு மாட்டிற்கு தானமாக தந்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து விநாயகப் பெருமானின் அருளால் கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வரலாம்.

சற்று முன்