- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் சுமை தீர தீப வழிபாடு

கடன் சுமை தீர தீப வழிபாடு

- Advertisement -

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே கண் கலங்கும் அளவிற்கு கஷ்டம். இன்றைய கலியுகத்தில் கடவுள் நமக்கு கஷ்டத்தை கொடுக்கின்றானோ இல்லையோ, இந்த கடன் சுமை கஷ்டங்களை வாரி வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர வேண்டும் என்று நாம் நினைத்தாலும், அந்த விதி நம்மை விடவே விடாது. கஷ்டத்தில் இழுத்துக் கொண்டு வந்து, நம்மை தள்ளக்கூடிய வேலையை சரியாக செய்து விடுகிறது (தலையெழுத்து)விதி.

சரி, நம்முடைய வாழ்க்கையில் குபேரன் எப்போதும் ஆக்டிவாக இருக்க வேண்டும். வருமானத்திற்கு எந்த இடத்திலும் தடை வரக்கூடாது என்றால் என்ன செய்வது. குபேரன் சந்தோஷமாக பணத்தை கொடுக்க, வருமானம் பெருக, கடன் எப்படி வரும். இதற்கு ஆன்மீக ரீதியாக, ஜோதிட ரீதியாக என்ன பரிகாரம் செய்வது இதோ எளிமையான பரிகாரம் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

பண கஷ்டத்தை தீர்க்கும் விளக்கு

உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் ஒரு தொண்ணையில் பச்சரிசி நெல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளி கிண்ணத்தில் இந்த நெல்லை வைப்பது இன்னும் சிறப்பு. வசதி இருந்தால் வெள்ளி கிண்ணத்தில் இந்த நெல்லை வைத்துக் கொள்ளுங்கள். இது சந்திர பகவானுக்கு உரிய தானியம், வெள்ளி சந்திரனுக்கு உரிய உலோகம். ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபச்சுடரானது ‘வடமேற்கு திசை’ நோக்கி எறிய வேண்டும்.

நெல்லுக்கு பக்கத்திலேயே இந்த தீபம் வைக்க வேண்டும். அந்த தீபச்சுடரை உங்கள் வீட்டு வடமேற்கு திசைக்கு திருப்பி வையுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். தினமும் காலையில் எழுந்து இந்த பரிகார தீபத்தை ஏற்றி வைத்து குல தெய்வத்தையும், குபேரரையும், சந்திர பகவானையும் மனதார நினைத்து எவர் ஒருவர் 2 நிமிடங்கள் கண்களை மூடி வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுடைய வாழ்வில் இருக்கும் கடன் சுமை படிப்படியாக குறையும். பணவரவு படிப்படியாக உயரும்.

- Advertisement -

பணத்திற்கு எந்த ஒரு கஷ்டமும் வரவே வராது. மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ, பழைய நெல் தானியங்களை எடுத்து குருவிகளுக்கு, பறவைகளுக்கு இரையாக போட்டுவிட்டு, மீண்டும் புதுசாக நெல் வாங்கி வைப்பது நல்லது. ஒரு வீட்டு பூஜை அறையில் நெல் இருந்தால் அந்த வீட்டில் எல்லா விஷயங்களும் விருத்தி அடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த விளக்கை மட்டும் ஒரு 48 நாள் ஏற்றிப் பாருங்கள். உங்கள் நிதி நிலைமையில் ஏற்படும் மாற்றத்தில் நல்ல திருப்தி இருக்கிறது என்றால், இதை அப்படியே தொடரும்போது, உங்கள் வாழ்க்கை மேலே உயரத்திற்கு செல்லும், பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்துவிட்டு, வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமைக்கு செல்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: மார்கழியில் செய்ய வேண்டிய தானம்

இந்த எளிமையான பரிகார விளக்கை என்றிலிருந்து ஏற்ற துவங்குவது. திங்கட்கிழமையிலிருந்து ஏற்றலாம். திங்கட்கிழமை சந்திர பகவானுக்கு உரிய நாளல்லவா. ஆகவே திங்கட்கிழமை இந்த விளக்கை ஏற்ற துவங்குங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்