பிரச்சனைகள் நம்மை துரத்தி அடிக்கிறது என்றால், எப்போதுமே நாம் ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது. ஒரு நிமிடம் நின்று அந்த பிரச்சனையை திருப்பிப் பார்த்து அந்த பிரச்சனையை நாம் துரத்தி அடித்து விட வேண்டும். அதே தான் கடனுக்கும். உங்களை துரத்தும் கடனை, கொஞ்சம் தைரியமாக எதிர்கொண்டு, அந்த கடனை திருப்பி அடைப்பதற்கு உண்டான வழிகளை யோசித்தாலே போதும்.
நம்மை துரத்தும் கடனை, நாம் துரத்தி அடித்து விடலாம். அதற்கும் ஒரு தைரியம் கிடைக்க வேண்டும் அல்லவா. அதற்கான ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கடன் தீர்க்கும் பிள்ளையார் வழிபாடு
ஒன்பது செவ்வாய்க்கிழமை பிள்ளையார் கோவிலில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய ஒரு தேங்காய், பூ, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு இவைகளை எல்லாம் வாங்கிச் செல்லவும். உங்களுடைய பெயரைச் சொல்லி விநாயகருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அர்ச்சகர் தேங்காயை இரண்டாக உடைத்துக் கொடுப்பார். 2 மூடி கிடைக்கும் அல்லவா. அதில் தான் இப்போது நாம் பரிகாரத்தை செய்யப்போகின்றோம்.
ஒரு வாழை இலையில் பச்சரிசியை பரப்பி, அதில் இந்த இரண்டு மூடிகளையும் நிற்க வையுங்கள். கோவிலிலேயே விநாயகருக்கு முன்பாக இந்த தேங்காய் மூடி களை வைத்து ஒன்றில் தேங்காய் எண்ணெயும், இன்னொன்றில் விளக்கு எண்ணெயும் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்த தேங்காயில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றிவிட்டு பிள்ளையாரை ஒன்பது முறை வலம் வந்து, தோப்பு காரணம் போட்டு, பிள்ளையார் கொட்டு வைத்து பிள்ளையார் கோவிலிலேயே சிறிது நேரம் அமர்ந்து, உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். யாருக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருக்கிறதோ, அவர் கையால் இந்த தீபத்தை ஏற்றி, பிழையாரை வழிபாடு செய்வது சிறப்பு.
என்னுடைய கணவருக்கு கடன் இருக்கிறது. என்னுடைய மகனுக்கு கடன் இருக்கிறது என்று தாயோ அல்லது மனைவியோ இந்த பரிகாரத்தை செய்யலாம். இருந்தாலும் கஷ்டம் இருப்பவர்கள் நேராக கடவுளை சந்தித்து முறையிடுவது தான் முழு பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன வழிபாட்டை ஒன்பது செவ்வாய்க்கிழமை தவறாமல் நீங்கள் செய்து வர, உங்கள் கடன் சுமை நிச்சயம் குறையும். கடனை அடைக்க வேண்டிய வேலைகளை நீங்கள் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர சிவன் வழிபாடு
நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில், வரும் தடைகளை சரி செய்யக்கூடிய வேலையை அந்த பிள்ளையார் பார்த்துக் கொள்வார். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.