தீராத கடன் தீர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரங்கள் என்ன?

astro-cash1

வாழ்க்கையில் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கடன்கள் இருக்கும். கடன் இல்லாத மனிதனே இல்லை என்று கூறலாம். எப்பேர்ப்பட்ட பணக்காரனாக இருந்தாலும் அவனுக்கு ஏதாவது ஒரு வகையில் கடன்கள் நிச்சயமாக இருக்கும். இத்தகைய தீராத கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு உங்கள் ராசிப்படி நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

astrology

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு கடன் தொல்லைகள் அதிகமாக இருக்கும் பொழுது நீங்கள் வீட்டில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி அதில் சிறிதளவு கல்கண்டு போட்டு மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வரலாம். இவ்வாறு செய்ய உங்கள் கடன்கள் காணாமல் போகும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு கடன் தொல்லைகள் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும் பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கிழங்கை தானம் செய்யுங்கள். இவ்வாறு செய்ய எல்லாம் கடனும் நீங்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு எவ்வளவு கடன் தொல்லைகள் இருந்தாலும் அதனை நீக்குவதற்கு சத்திய நாராயண கடவுளுக்கு அரிசியால் உணவு செய்து அதை தானமாக கொடுக்கலாம். இப்படி செய்தால் எல்லா கடனும் நீங்கும். மாதம் ஒரு முறை அன்னதானம் செய்யலாம்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்த உங்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதற்கு சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. சிவபெருமான் கோவிலுக்கு சென்று அங்குள்ள வில்வ மரத்தை வலம் வந்து வில்வ இலைகளால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வந்தால் போதும் எல்லா கடன் தொல்லைகளும் நீங்கிவிடும்.

- Advertisement -

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு தீராத கடன் பிரச்சனை தீர குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. குலதெய்வ குற்றங்கள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்து வர வேண்டும் இப்படி செய்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் நீங்கிவிடும்.

கன்னி
kanni
கன்னி ராசியில் பிறந்த உங்களுக்கு இது போன்ற கடன் தொல்லைகள் இருப்பின் நீங்கள் பச்சை புடவை அணிந்து கொண்டிருக்கும் கஜலட்சுமியை வணங்கி வருவது சிறப்பாகும். மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் கஜலட்சுமிக்கு இரண்டு புறமும் யானைகள் அபிஷேகம் செய்வது போல இருக்கும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்த நீங்கள் கோவில்களுக்கு சென்று அங்குள்ள மூலஸ்தானத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் தானம் கொடுத்து வரலாம். இவ்வாறு செய்து வந்தால் உங்கள் கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் பைரவ வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனாக அமையும். வியாழன் கிழமையில் பைரவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள சன்னிதியில் செவ்வரளி மலர்கள் சாற்றி மிளகு தீபம் ஏற்றி வரலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசியில் பிறந்த நீங்கள் வராஹி அம்மனை வழிபட்டு வர கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வராகி தேவிக்கு உகந்த நைவேத்தியங்கள் படைத்து அவரை மனதார தொழுதாலே தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

மகரம்
Magaram rasi
மகர ராசியில் பிறந்த நீங்கள் குரு பகவானை வழிபட்டு வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குரு தட்சிணாமூர்த்தி, குரு பகவான் ஆகியோரின் சன்னிதியில் முறையே வெண்மை நிற வஸ்திரம், மஞ்சள் நிற வஸ்திரம் அவரவர்களுக்கு உகந்தது படி வழிபட்டு வந்தால் சகலமும் வசமாகும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்த உங்கள் ராசிக்கு பித்ரு வழிபாடு செய்வது மிகவும் நல்லது. ஆறு முகங்களைக் கொண்ட ஆறுமுகனை வழிபட்டு 6 விளக்கு ஏற்றி வணங்கி வந்து பாருங்கள் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து கடன் தொல்லைகள் தீரும்.

மீனம்
meenam
மீன ராசியில் பிறந்த உங்களுக்கு கடன்கள் தீர சுலபமான பரிகாரம் உண்டு. பசு மாட்டிற்கு அகத்திக்கீரை தானம் செய்வது மிகவும் சிறந்த பலனை அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மீன ராசியில் பிறந்த நீங்கள் பசு மாட்டுக்கு 9 மஞ்சள் வாழைப்பழம் கொடுத்து பாருங்கள் அதைவிட சிறந்த பலன் இல்லை.